ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் கேஜ்ரிவாலுக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!!
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் 5 ஆம் ஆத்மி தலைவர்கள் 3 வாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் 14 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்தவர் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. இவரது பதவி காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் கமிஷனையும் கேஜ்ரிவால் அமைத்துள்ளார்.

இதனிடையே தம் மீதான ஊழல் புகார்களை நிராகரித்துள்ள அருண்ஜேட்லி, கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிவில் அவதூறு வழக்கை நேற்று தொடர்ந்தார்.;'
இவ்வழக்கை இன்று ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. 3 வாரங்களுக்குள் அனைவரும் பதிலளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 6-ந் தேதி நடைபெறும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கேஜ்ரிவாலுக்காக எந்த ஒரு கட்டணமுமில்லாமல் ஆஜராகப் போவதாக மூத்த வழக்கறிஞரும் பா.ஜ.க.வில் இருந்து 6 ஆண்டுகாலத்துக்கு நீக்கப்பட்டவருமான ராம்ஜேத்மலானி ஆஜராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications