தினகரன் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்!
தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனுமதிக்க கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Recommended Video

டெல்லி: அதிமுக அம்மா பெயரில் குக்கர் சின்னத்துடன் தனது தலைமையிலான அணியை தனித்து செயல்பட அனுமதிக்க கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் போட்டியிடுவதற்கு அனுமதி தரக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், இறுதி உத்தரவு வரும் வரை அதிமுக அம்மா அணி என்ற பெயர் மற்றும் குக்கர் சின்னத்துடன் செயல்பட தாம் விரும்புவதாக தினகரன் தெரிவித்திருந்தார்.

குக்கர் சின்னத்தில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னத்தில் தனி அணியாக தாங்கள் செயல்பட விரும்புவதாகவும் டிடிவி தினகரன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரலில் உள்ளாட்சித் தேர்தல்
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தினகரனின் வக்கீல் தெரிவித்தார்.

குக்கர் சின்னம் வேண்டும்
இதனை முன்னிட்டு தினகரனின் தலைமையிலான அணியை அதிமுக அம்மா அணி என்ற பெயரில் குக்கர் சின்னத்துடன் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தினகரனின் வக்கீல் வாதிட்டார்.

டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ்
இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தினகரன் வழக்கில் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications