டெல்லி மர்ம மரணம்.. கடைசி நேரத்தில் வந்து காப்பாற்றுவதாக வாக்களித்த சாமியார்.. போலீஸ் வலைவீச்சு
டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில், சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விஷயத்தில், சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அந்த சாமியாருக்கு தற்போது வலை விரித்துள்ளது.
டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

பிரேத பரிசோதனை முடிவு
இந்த மர்ம மரணத்தில் நேற்று இரவு முழுக்க பரிசோதனை செய்யப்பட்டு, தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி இவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறியுள்ளனர். ஆனால் முழுமையாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகவில்லை. இவர்கள் தற்கொலை செய்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று போலீஸ் கூறுகிறது.

சைலன்ட் மோடில் போன்
அந்த வீட்டில் போலீஸ் நடத்திய சோதனையில், துணி வைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலன்ட் மோடில் இருந்துள்ளது. அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்து இருந்துள்ளனர். இதற்கும் கூட, என்ன காரணம் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. அதன்படி, இந்த முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக் கொள்ள கூடாது என்று ஒரு சாமியார் சொல்லி இருக்கிறார்.

யார் அந்த சாமியார்
அந்த செல்போன் உரையாடலின் படி ஒரு பிரபல சாமியாரிடம் இந்த குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி போனில் பேசி இருக்கிறார்கள். அந்த போன் ரெக்கார்டுகள் எல்லாம் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளது. அவர் யார் என்ற விவரத்தை போலீஸ் இன்னும் வெளியிடவில்லை. தற்போது அந்த சாமியார் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடிக்கும் முடிவில் உள்ளது.

காப்பாற்றுவார்
அங்கு கிடைத்த டைரி குறிப்பில் மிக முக்கியமான விஷயம் ஒன்று இருந்துள்ளது. அதில், நீங்கள் எல்லாம் மிகவும் நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள். உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது. நீங்கள் தூக்கு மாட்டி சடங்கு செய்யுங்கள். ஏதாவது தவறாக நடந்தால், கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என்று அந்த மர்ம சாமியார் கூறியதாக டைரியில் எழுதப்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications