டெல்லி தேர்தல்: "பிரதமர்" மோடியின் முதல் பெருந்தோல்வி!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தோல்வி பிரதமர் ஆன பின்னர் பிரதமர் மோடி சந்திக்கும் முதல் பெருந்தோல்வியாக பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக ஆட்சி செய்த நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு காணப்பட்டாலும் குஜராத் வளர்ச்சியை முன்வைத்து அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மோடி முழக்கத்தை முன்வைத்து பாரதிய ஜனதா பிரசாரம் செய்தது. அதற்கு பெறும் வெற்றியே கிடைத்தது.

லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக 282 தொகுதிகளில் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார்.
தமிழகம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதாவின் ஆதிக்கமே லோக்சபா தேர்தலில் காணப்பட்டது. இதனையடுத்து நாட்டில் நடைபெற்ற பல்வேறு மாநில சட்டசபை தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்வைத்தே பாரதிய ஜனதா பிரசாரம் செய்தது.
2014 அக்டோபர் மாதம் நடைபெற்ற ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியே வெற்றிபெற்றது.
இருமாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க. வெளியேற்றியது.
மகாராஷ்டிராவில் 15 ஆண்டுக்குப் பின்னர் முதல்-முறையாக பாரதிய ஜனதா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. சிவசேனா கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு 122 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றது. தேர்தலை அடுத்து 63 தொகுதிகளில் வெற்றிபெற்ற சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
ஹரியானாவிலும் 10 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியை வெளியேற்றிய பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகமே. ஜார்கண்ட் மாநிலத்தில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்று, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.
ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், இதுவரையில் இல்லாத அளவு மாநிலத்தில் அக்கட்சியின் வளர்ச்சி காணப்பட்டது.
அங்கு மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி 2வது இடத்திற்கு வந்தது. இது பாரதிய ஜனதாவிற்கு பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது.
நரேந்திர மோடி பிரதமர் ஆன பின்னர் தொடர்ந்து வெற்றி பாதையிலே சென்ற பாரதிய ஜனதாவிற்கு முதல் பெரும் சரிவாக பலத்த அடியாக டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைத்துள்ளன.
இது பிரதமர் ஆன பின்னர் மோடி முதல் முறையாக சந்திக்கும் தோல்வி என்று கருதப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
தற்போதைய தேர்தலிலோ 3 இடங்களைக் கைப்பற்றுவதற்கே பெரும்பாடாகிக் கொண்டிருக்கிறது பாரதிய ஜனதாவுக்கு. இந்த தோல்வியைத் தொடர்ந்து இனியும் மோடியை முன்வைத்து இதர மாநிலங்களில் பாரதிய ஜனதா பிரசாரம் செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications