உலகிலேயே டெல்லி காற்று தான் மோசமாம்: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்
டெல்லி: உலகிலேயே டெல்லியில் தான் காற்று அதிகம் மாசு அடைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2014ம் ஆண்டில் உலகில் உள்ள 1,600 நகரங்களில் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் இருப்பதிலேயே டெல்லியில் தான் காற்று அதிகம் மாசுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவை விட டெல்லியில் காற்று 10 மடங்கு அதிகம் மாசுபட்டுள்ளது. மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் பிஎம் 2.5 என்ற பொருள் டெல்லியில் வீசும் காற்றில் அதிகம் உள்ளது.
காற்றில் சிறிய அளவில் திரவம் அல்லது திடப் பொருள் இருப்பதை தான் பி.எம். என்கிறார்கள். இந்த பொருட்கள் கார்பன், சல்பர், நைட்ரஜனால் ஆனதாக இருக்கலாம். சுற்றுச்சூழல் மாசால் புற்றுநோய், இதயநோய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.
டெல்லியில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது காற்று மாசுபட முக்கிய காரணம் ஆகும். டெல்லி சாலைகளில் தினமும் 85 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், 1,400 கார்களும் ஓடுகின்றன.
இது தவிர குப்பைகள் எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவையும் காற்றை மாசுபட வைக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications