டெல்லியில் சாதி அரசியலைத் தாண்டிய வர்க்க அரசியல் ஓங்கியிருக்கிறது... யோகேந்திர யாதவ்
டெல்லி: சாதி அரசியலைத் தாண்டி வர்க்க அரசியல் ஓங்கியதாக டெல்லி அரசியல் இருக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் சித்தாந்தவாதியான யோகேந்திர யாதவ் தமது அரசியல் பயணம் குறித்து விவரித்திருக்கும் பேட்டியின் ஒரு பகுதி:

ஆம் ஆத்மி கட்சி ஏராளமான நடுத்த வர்க்க தொழில்முறையாளர்களை அரசியலுக்கு ஈர்த்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பதுறையை சேர்ந்தவர்கள், நிர்வாகவியல் சார்ந்தவர்கள்.
வழக்கமான சமூக செயற்பாட்டாளர்களுக்கு அப்பால் புதிய செயற்பாட்டாளர்கள் களம் ஒன்று உருவாகி இருக்கிறது. இதைத்தான் அம் ஆத்மி கட்சி சாதித்தும் இருக்கிறது. டெல்லி அரசியல் என்பது சாதி அரசியலைத் தாண்டிய வர்க்க அரசியலாக இருக்கிறது.
நான் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் போதே டெல்லி தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தோம். தனிநபர்களின் விருப்பு வெறுப்புகளைத் தாண்டி அறிவியல்பூர்வமான கருத்து கணிப்புகளின் அடிப்படையில் முடிவு எடுக்கவும் விரும்பினோம்.
அனைவரும் ஏற்றுக் கொண்டோம். அப்போது நாங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் 14% ஆதரவு இருந்தது. இது எங்களுக்கு ஊக்கமாக இருந்தது.
கடந்த ஏப்ரல், ஜூலை மாதம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த போது அரவிந்த் கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் என்னை தொடர்பு கொண்டு பேசினர். அவர்களோடு நானும் இணைந்து கொள்ள விரும்பினர்.
என்னைப் பொறுத்தவரையில் அரசியலில் சிறிய சக்திகளாக இருப்பவர்கள்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவால், பிரஷாந்த் பூஷண் ஆகியோரையும் பார்க்கிறேன்.
டெல்லியைப் பொறுத்தவரையில் கடந்த 20 ஆண்டுகாலமாக காங்கிரஸ் வசம் இருந்த இஸ்லாமியர் வாக்கு வங்கி இப்போது கை மாறியிருக்கிறது. படித்த, இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல ஈர்ப்பு இருப்பதை உணர முடிகிறது. அதே போல்தான் தலித்துகளிடத்திலும்.
அத்துடன் எங்கள் கட்சியின் துடைப்பம் சின்னமும் வால்மீகி இனத்தவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. டெல்லியில் தலித்துகளிடம் 32% ஆதரவை நாங்கள் பெற்றிருக்கிறோம் என்றார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications