டெல்லியில் கேவலம்: பெண்களை தந்தை, சகோதரர், உறவினர் சீரழிப்பது அதிகரிப்பு
டெல்லி: 2014ம் ஆண்டில் முதல் 10 மாதங்களில் தலைநகரில் பதிவான 1, 704 பலாத்கார வழக்குகளில் 215 வழக்குகளில் குற்றவாளிகள் உறவினர்களாக உள்ளதாக டெல்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் வரை டெல்லியில் மொத்தம் 1,704 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 215 வழக்குகளில் குற்றவாளிகள் உறவினர்கள் ஆவர். இதில் விந்தை என்னவென்றால் 43 வழக்குகளில் குற்றவாளிகள் தந்தை, 27 வழக்குகளில் சகோதரர்கள் குற்றவாளிகள்.
ஒரு வழக்கில் குற்றவாளி பெண்ணின் தாத்தா. 23 வழக்குகளில் குற்றவாளிகள் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் மாற்றாந்தந்தைகள். 8 வழக்குகளில் குற்றவாளிகள் மாமனார், 3 வழக்குகளில் காமக்கொடூரன்கள் மருமகன்கள், 74 வழக்குகளில் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மைத்துனர்கள்.
இது தவிர மாமா அல்லது தாய்மாமா 32 வழக்குகளில் பாலியல் குற்றவாளிகள். 4 வழக்குகளில் குற்றவாளிகள் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள். உறவினர்கள் மட்டும் அல்லாது அக்கம்பக்கத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் 352 பேர். 83 பெண்கள் குடும்ப நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
24 பெண்கள் ஆசிரியர்கள், டியூஷன் வாத்தியார்களாலும், 5 பேர் சாமியார்களாலும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள 1, 613 பேரில் 116 பேர் கல்வி அறிவில்லாதவர்கள், 570 பேர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 122 பேர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தவர்கள், 23 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 4 பேர் 2 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகள், 115 பேர் 2 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள், 127 பேர் 7 முதல் 12 வயது வரை உள்ளவர்கள். பலாத்காரம் செய்யப்பட்டவர்களில் 10ல் 9 பேர் தெரிந்தவர்களால் தான் சீரழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை டெல்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications