பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி டெல்லி தமிழ்நாடு இல்லம் முன்பு மாணவர்கள் போராட்டம்
டெல்லி: மதுவிலக்கை வலியுறுத்தி பாடியதால் கைது செய்யப்பட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடகர் கோவனை விடுதலை செய்யக் கோரி டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பாக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடகரான கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பாடிய பிரசார பாடலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கோவனை விடுதலை செய்யக்கோரி நேற்று டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றின் 50 மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் தமிழ்நாடு இல்லத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்துக்குள் நுழைந்துவிடாதபடி போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன் கோவனின் 'மூடு.. டாஸ்மாக்கை மூடு...' பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து துண்டு பிரசுரங்களாகவும் அந்த மாணவர்கள் டெல்லியில் விநியோகித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications