லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை செங்கல்லால் அடித்த போக்குவரத்து காவலர் “சஸ்பெண்ட்”
டெல்லி: டெல்லியில் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை போக்குவரத்து காவலர் ஒருவர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அந்த பெண்ணை, போக்குவரத்து தலைமை காவலர் சத்தீஷ் சந்திரா என்பவர் வழிமறித்துள்ளார். சிக்னலை மதிக்காமல் சென்றதற்காக 200 ரூபாய் தர வேண்டும் என்று அவர் நிர்பந்தித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சத்தீஷ் சந்திரா அந்த பெண்ணை செங்கல்லால் தாக்கியதுடன், அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
பெண்ணை தாக்கிய சத்தீஷ் சந்திரா கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக டெல்லி மாநகர காவல் ஆணையர் பாஸி தெரிவித்துள்ளார். காயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications