வங்கிகளில் இதுவரை டெபாசிட்டான பணம் எவ்வளது தெரியுமா? மத்திய அமைச்சர் தகவல்
4 லட்சம் கோடு ரூபாய் வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் 4 லட்சம் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்புடன் கூடிய இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது எனவும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி திடீரென அறிவித்தார். அதைதொடர்ந்து, பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் பெற்றுச் செல்கின்றனர்.

முதலில் ஒரு நாளைக்கு ரூ 4000 வரை பழைய நோட்டுகள் மாற்றலாம் என அரசு அறிவித்திருந்தது. பின்னர் அதை ரூ 2000 ஆக குறைத்தது. இந்நிலையில், தற்போது புதிய ரூ 2000 நோட்டுக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூபாய் மதிப்பு 4 லட்சம் வரை இருக்கலாம் எனத் தகவல் வெளியாகிருந்தது.
இந்நிலையில், ரூபாய் நோட்டுக்களை மாற்றும் நடவடிக்கைக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரரவிசங்கர் பிரசாத் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: ரூபாய் நோட்டு மாற்றம் நடைமுறைக்கு வந்து 11 நாட்கள் ஆன நிலையில், அதற்கு பலன் கிடைத்துள்ளது. இதுவரை வங்கிகளுக்கு 4 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் பழைய நோட்டுகள் எல்லாம் தற்போது தூய பணமாக மாறியுள்ளது. தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவோயிஸேட்டுகள் மற்றும் இதர தீவிரவாத குழுக்களின் நிதி ஆதாரம் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications