ரூபாய் நோட்டுகள்... மோடியின் சர்ஜிகல் அட்டாக்கில் பலியான அந்த 55 அப்பாவிகள் இவர்கள்தான்!
ரூபாய் நோட்டு செல்லாத விவகாரத்தில் இதுவரை பலியான 55 பேரின் விவரங்கள்..
டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றப் போய் நெரிசலில் சிக்கியும் அய்யோ சேர்த்து வைத்த எல்லா பணமும் போயிவிட்டதே என தற்கொலை செய்து கொண்டும் மாண்டுபோனவர்களின் உறுதியான எண்ணிக்கை தற்போது 55 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னமும் பதிவு செய்யப்படாத மரணங்கள் நிச்சயம் கூடுதலாகத்தான் இருக்கும்.
நவம்பர் 8-ந் தேதியன்று இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமர், ஊழல்வாதிகள் இனி உறக்கத்தை தொலைத்துவிடுவர் என்றார்... ஆனால் நடைமுறை யதார்த்தமோ இந்த தேசத்தின் அடித்தட்டு மக்கள்தான் கடந்த 10 நாட்களாக தூக்கத்தைத் தொலைத்துவிட்டு துக்கங்களுடன் நடுத்தெருவில் ரூ500, ரூ1,000 மாற்ற நிற்கின்றனர்.

இந்த ஒட்டுமொத்த நாட்டையே நடுவீதியில் நிறுத்திய இந்த நாசகார நடவடிக்கைக்கான வக்காலத்துகள் அதிகம்... எந்த ஒரு முன்கூட்டியான யோசனையும் திட்டமும் இல்லாமல் நாடும் நாட்டு மக்களும் நாசகாமப் போகட்டும் என முடிவெடுத்து நாள்தோறும் பீதியை ஏற்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்... இந்த புளியைக் கரைக்கும் பூச்சாண்டி வேலைகள் எத்தனை நாள் தொடருமோ?
இந்த திட்டமிட்டாத மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் இதுவரை நெரிசலில் சிக்கியும் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55. இது உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள்.. இன்னமும் பதிவு செய்யப்பட்டாத மரணங்கள் எத்தனையோ?
1. 12 லட்சம் ரூபாய் செல்லாத நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் டெல்லியைச் சேர்ந்த 25 வயது வீரேந்தர பசோயா என்ற தொழிலதிபர் வீட்டு ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். (http://indianexpress.com/article/india/india-news-india/delhi-unable-to-exchange-notes-man-commits-suicide-4381382)
2. ஆந்திராவின் சித்தூரில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி கியூவில் நின்று கொண்டிருந்த 70 வயது ரத்னா பிள்ளை அப்படியே அங்கேயே செத்து மடிந்தார். (http://www.thehindu.com/todays-paper/70yrold-waiting-for-cash-exchange-dies-in-chittoor/article9354717.ece)
3. ஹரியானாவின் ரோதக் மாவட்டத்தில் 3 நாட்கள் இரவும் பகலுமாக பணிபுரிந்த 56 வயது வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் அலுவலகத்திலேயே பிணமாக கிடந்தார். (http://www.hindustantimes.com/india-news/bank-manager-in-rohtak-dies-in-office-after-spending-three-days-at-work/story-aaMsJOC53e9PkUm84LfnSO.html)
4. உத்தரப்பிரதேசத்தின் ஆசம்காரில் வங்கியில் கியூவில் நின்று கொண்டிருந்த நிலையில் 70 வயது ஐஸ்டேயக் அகமது என்ற முதியவர் மாண்டு போனார். (http://timesofindia.indiatimes.com/city/varanasi/Man-dies-standing-in-bank-queue/articleshow/55468384.cms)
5. வங்கியில் போட்டிருந்த பணத்தை மகளின் திருமணத்துக்காக எடுக்க முடியா விரக்தியில் மாரடைப்பால் செத்து போனார் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது டீ விற்பனையாளர் ஜெகதீஷ் பன்வார். (http://indianexpress.com/article/india/india-news-india/demonetisation-no-money-sikar-days-before-daughters-wedding-tea-seller-dies-4381034/)
6. செல்லாத ரூபாய் நோட்டுகளை லோன் வாங்கிய பைனான்சியரிடம் கொடுத்தார் தெலுங்கானாவின் நிஜாமாபாத்தின் 35 வயது ஆட்டோ ஓட்டுநர் ஷேக் பஷீர். ஆனால் செல்லாத ரூபாய் நோட்டுகளை பைனான்சியர் வாங்க மறுத்தார். இந்த விரக்தியில் தீக்குளித்து இறந்து போனார் ஷேக் பஷீர். (http://www.ndtv.com/hyderabad-news/auto-driver-kills-himself-after-financer-declines-old-notes-in-hyderabad-1625898)
7. உ.பி.யின் மீரட் நகரில் வங்கி வாசலில் கியூவில் நின்றபடியே உயிரிழந்தார் முகமது ஷாக்சத். (http://www.thehindu.com/news/national/other-states/second-death-in-bank-queue-in-meerut/article9357820.ece)
8. ம.பி.யின் பிந்த் மாவட்டத்தில் ரூ12,000 பணத்தை மாற்ற செல்லும் போது வங்கியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நடுவழியில் உயிரிழந்தார் முன்னாள் ராணுவ வீரர் பாபுலால் வால்மீகி. (http://www.theweekendleader.com/Headlines/8408/ex-armyman-dies-on-his-way-to-exchange-money-in-mp.html)
9. ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாலமு மாவட்டத்தில் ராம் சந்திர பாஸ்வான் என்ற அரசு ஊழியர் வங்கியில் நீண்ட வரிசையில் நின்றபடியே உயிரிழந்தார். (http://indianexpress.com/article/india/india-news-india/demonetisation-rs-500-1000-ban-jharkhand-elderly-man-collapses-in-queue-dies-4379606/)
10. உ.பி.யில் பல்லியாவில் சுரேஷ் சோனார் பணத்தை மாற்ற முடியாத மன அழுத்தத்தில் உயிரிழந்து போனார். (http://www.deccanchronicle.com/nation/current-affairs/161116/demonetisation-bride-to-bes-father-dies-of-heart-attack-in-uttar-pradesh.html)
11. மகாராஷ்டிராவின் புனேவில் மக்கள் கூட்டத்தை 12 மணிநேரம் தொடர்ந்து கட்டுப்படுத்திக் கொண்டிருந்த வங்கி பியூன் துகாராம் தன்புர் அங்கேயே உயிரிழந்தார். (http://www.hindustantimes.com/mumbai-news/demonetisation-stressed-bank-employee-tired-customer-die-in-maharashtra/story-Br9xXBf0M5aZQjmfO0NO3O.html)
12. மகாராஷ்டிராவின் நாண்டெட் மாவட்டத்தில் வங்கி வரிசையில் நின்று கொண்டிருந்த 60 வயது திகம்பர் கஸ்பே உயிரிழந்தார். (http://www.hindustantimes.com/mumbai-news/demonetisation-stressed-bank-employee-tired-customer-die-in-maharashtra/story-Br9xXBf0M5aZQjmfO0NO3O.html)
13.. செல்லாத ரூபாய் நோட்டு மாற்றத்தால் வேலை இழந்த விரக்தியில் ஜார்க்கண்ட்டின் பொகாரோ மாவட்டத்தில் லாவ்குஷ் என்ற 20 வயது இளைஞர் பலியானார். (http://www.news18.com/news/india/cash-crunch-long-queues-claim-three-lives-in-jharkhand-1312539.html )
14. வேலை கிடைக்காத விரக்தியில் செத்து போன ஜார்க்கண்ட்டின் லாவ்குஷ்-ன் பாட்டி லக்ஷ்மியும் பேரனின் மரண செய்தி கேட்டு மாண்டுபோனார். (http://www.news18.com/news/india/cash-crunch-long-queues-claim-three-lives-in-jharkhand-1312539.html)
15. தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் விற்க திட்டமிட்டிருந்த நிலத்தின் மதிப்பு படுமோசமாக குறைந்த விரக்தியில் சாப்பாட்டில் விஷத்தை கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.(http://www.firstpost.com/india/demonetisation-after-poisoning-kin-farmer-commits-suicide-with-father-in-telangana-3108840.html)
(தொடரும்)
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
அபிஷேக் சர்மா அவுட்.. ரிங்கு சிங் இன்.. அரையிறுதியில் மொத்தமாக மாறப்போகும் இந்திய பிளேயிங் லெவன்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications