500, 1000 ரூபாய் நோட்டுகளை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் பாவம் நீங்கி விடாது: மோடி பொளேர்
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் ஊழல் வாதிகள் தூக்கம் இழந்திருப்பதாகவும், ஆனால் இந்த முடிவுக்கு ஏழை-எளிய மக்கள் தமக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்
காசிப்பூர்: 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருப்பதால் ஊழல்வாதிகள் தூக்கம் இழந்திருப்பதாகவும்,காங்கிரஸ் ஊழல் வாதிகள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருவதாகவும், ஏழை எளிய மக்கள் ஆதரவு தமக்கு உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் பரிவர்தன் யாத்திராவில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் மோடி, அதிக மதிப்புள்ள பண நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது முதல் ஏழை மக்கள் நிம்மதியாக தூங்கி வருகின்றனர் என்றும், பணக்காரர்கள் தூக்கம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டு அதற்ககாக தம்மை குறைகூறி வரும் எதிர்கட்சிகளை ஏளனமாக பேசிய பிரதமர் மோடி, மக்கள் இவ்விவகாரத்தில் எதிர் கொண்டு வரும் இன்னல்களை தாம் அறிந்து உள்ளதாகவும் கூறினார்.
சில அரசியல் கட்சிகள் 500, 1000 ரூபாய் நோட்டுக்களாக வசூலித்து வைத்துள்ள கோடிக்கணக்கான பணம் வீணாகி குப்பைத் தொட்டியில் போட வேண்டியிருப்பதால் அதிக கவலை கொண்டுள்ளதாக மோடி சாடினார்.
பிரதமர் மோடி சரியான நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலர் முகமலர்ச்சியுடன் வரவேற்றுள்ளதாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும், அவர்களது கட்சித் தொண்டர்களை இந்த நடவடிக்கைக்கு எதிராக தூண்டி விட்டு வருவதாக, யாரையும் குறிப்பிட்டுப் பேசாமல் மோடி குற்றம் சுமத்தினார்.
செல்வாக்கு மிக்க மக்களை இந்த நடவடிக்கை பாதித்துள்ளதாகவும், தாம் ஏழை-எளிய மக்களுக்காக போராடி வருவதாகவும் அவர் சொன்னார். அதிக பணம் வைத்துள்ள செல்வாக்கு மிக்கவர்களால் தாம் பெரும் இன்னல்களை சந்திப்பேன் என தெரிந்தும் ஏழை மக்களுக்காக இந்த போராட்டத்தில் இறங்கி இருப்பதாக மோடி சுட்டிக்காட்டினார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்களை கங்கை நதியில் போட்டுவிட்டால் மட்டும் அவர்களது பாவம் நீங்கி விடாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications