ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம்.. எதிர்கட்சிகள் கடும் அமளி.. ராஜ்ய சபா 6வது நாளாக முடக்கம்
ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக ராஜ்ய சபாவில் எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
டெல்லி: ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சனை குறித்து எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கேள்வி கேட்டு கோஷம் எழுப்பி வருவதால் இன்றும் ராஜ்ய சபாவை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டு அவை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள் அன்றே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது விவகாரத்தை கடுமையாக கண்டித்து காங்கிரஸ் கட்சி பேசியது. மேலும், தொடர்ந்து ராஜ்ய சபாவில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தொடர் அமளியில் ராஜ்ய சபா எம்பிக்கள் செய்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து, ஆளும் பாஜக அரசு எந்த விவாதத்தையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் ராஜ்ய சபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா தொடங்கியது. அப்போது, எதிர்கட்சிகள் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை சபா நாயகர் ஏற்க மறுத்தார். இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இருக்கையில் இருந்து எழுந்து சபாநாயகர் இருக்கையின் அருகில் வந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சபாநாயகர் ராஜ்ய சபாவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். மீண்டும் அவை கூடிய போது, எதிர்கட்சிகளும் மீண்டும் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 3வது முறையாக பிற்பகல் 2 மணிக்கு அவை கூடிய போது, எதிர்கட்சிகளின் அமளி தொடர்ந்து நடைபெற்றது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகர் அவையை நாளை வரை ஒத்தி வைத்தி வைத்தார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications