மோடி எங்கே.. மோடி எங்கே.. எதிர்க்கட்சியினர் தொடர் அமளி.. ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைப்பு
மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் பிரதமர் மோடி ராஜ்ய சபாவிற்கு வராததால் எதிர்க்கட்சியினர் கடும் அமளி ஈடுபட்டனர்.
டெல்லி: ராஜ்ய சபாவில் இன்று நடைபெற்ற ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான விவாதத்தில் மோடி தொடர்ந்து பங்கேற்கவில்லை. இதனை கண்டித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. ராஜ்ய சபாவில் தொடங்கிய முதல் நாளில் இருந்தே, அவையில் ரூபாய் நோட்டுக்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் மோடி அவைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு ராஜ்ய சபா கூடியது. அவை தொடங்கிய உடன் எதிர்க்கட்சியினர் ரூபாய் நோட்டுக் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அமளியில் ஈடுப்பட்டனர். அமளியை கட்டுப்படுத்த முடியாததால் சபாநாயகர் 12 மணி வரை அவையை ஒத்தி வைத்தார்.
பின்னர், 12 மணிக்கு அவை கூடிய போது, பிரதமர் மோடி வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபாவில் ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இந்த விவாதத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் விவாதத்தில் பங்கேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.
உணவு இடைவேளைக்கு பின்னர் பிரதமர் மோடி ராஜ்ய சபாவிற்கு வரவில்லை. இதனால் எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். மோடி எங்கே மோடி எங்கே என்று தொடர்ந்து கோஷமிட்டனர். மோடி இருந்தால்தான் விவாதத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்றும் எதிர்க்கட்சியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதற்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பிரதமர் மோடிதான் பதில் கொடுப்பார் என்றும் தொடர்ந்து விவாதம் நடத்தவும் கூறினார். ஆனால் எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாளை வரை ராஜ்ய சபாவை சபாநாயகர் குரியன் ஒத்தி வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications