தீவிரவாதத்தை ஒடுக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம்... ஆசியாவின் இதயம் மாநாட்டில் மோடி
அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று ஆசியாவின் இதயம் மாநாட்டில் மோடி கூறியுள்ளார்.
அமிர்தசரஸ்: நாம் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில், ஆசியாவின் இதயம் என்ற மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
ப்பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமர்தசரஸ் நகரில் ஹார்ட் ஆப் ஆசியா என்ற மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

ஆப்கானின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அமிர்தசரஸ் மாநாடு உதவும். அந்நிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆப்கானை பாதுகாக்க வேண்டும். ஆப்கானிஸ்தானையும் அதன் மக்களையும் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே உலகநாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மீது கவனம் குவித்து வருகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு இப்போது உடனடியாக தேவைப்படுவது அமைதியாகும். அந்நாட்டிற்கான அமைதியையும் உறுதித்தன்மையையும் நிலைநாட்ட இந்தியா உறுதி மேற்கொள்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும். நாம் அமைதியாக இருந்தால் தீவிரவாதம் வலுபெற்றுவிடும்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை இந்தியா கட்டிக் கொடுத்தது. இது இந்திய ஆப்கானிஸ்தான் உறவை பிரதிபலிப்பதாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து வர்த்தக மேம்பாடு அடைய ஆப்கானிஸ்தானுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த மாநாட்டை ஆப்கானிஸ்தான் பிரதமர் அஸ்ரப்புடன் இணைந்து தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சி என்று பேசினார்.
முன்னதாக, இந்த மாநாட்டிற்கு வந்தவர்களிடம் வரவேற்பு உரையாற்றினார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications