மோடி கூட்டத்தை சீர்குலைக்க நடந்த முயற்சியே குண்டுவெடிப்பு - பாஜக
Subscribe to Oneindia Tamil
பாட்னா: நரேந்திர மோடியின் கூட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. பாட்னாவில் இன்று நடந்த குண்டு வெடிப்புகள் இதைத்தான் காட்டுகிறது என்று பாஜக தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புக்குப் பின்னர் பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜீவ் பிரதார் ரூடி கூறுகையில், இந்த குண்டுவெடிப்புகள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை நிரூபிக்கிறது. இருப்பினும் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். திட்டமிட்டபடி மோடி இன்று பேசுவார் என்றார்.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், குண்டுவெடிப்பை நாங்கள் கண்டிக்கிறோம். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
குண்டுவெடிப்புக்குப் பின்னர் கூட்டம் நடைபெற்ற பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications