சுப்ரீம் கோர்ட் உத்தரவையும் மீறி களத்தில் இறக்கப்பட்ட கிரிமினல் வேட்பாளர்கள்!
டெல்லி: கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றோரை பதவி நீக்கம் செய்வது ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் கிரிமினல் வேட்பாளர்களை களம் இறக்குவதை விடுவதாக இல்லை.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்றோர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர முயற்சித்தது. அந்த முயற்சியைத்தான் முட்டாள்தனமான முடிவு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு தமது முடிவை திரும்பப் பெற்றது. பின்னர் தண்டனை பெற்ற எம்.பிக்களின் பதவிகளை நீக்கம் செய்தும் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

கிரிமினல்கள் ஆதிக்கம்
இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கிரிமினல் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கின்றன பிரதான அரசியல் கட்சிகள்.

ம.பி.யில் 243
மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோரில் 243 பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்திருக்கின்றனர்.

காங். அதிகம்
இப்படி நிறுத்தப்பட்ட கிரிமினல்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள்தான் அதிகம். காங்கிரஸ் கட்சி 91, பாஜக 61. பகுஜன் 54 கிரிமினல் வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 113 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காங். ஆதிக்கம்
இவர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் 18, பாஜக சார்பில் 13 பேர் வேட்பாளர்கள்.

மிசோரமும் கூட..
மிசோரமில் 142 வேட்பாளர்களில் மூவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இப்படிப்பட்ட கிரிமினல்கள் வெற்றி பெற்று அவர்கள் மீதான வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பதவி பறிபோகும் என்று தெரிந்தே கட்சிகள் இவர்களை களத்தில் இறக்கியிருக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications