கர்நாடகா அணைகளை திடீரென ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்த தேவகவுடா!
மைசூரு: கர்நாடக அணைகளின் நீர் நிலைமைகளை முன்னாள் பிரதமர் தேவகவுடா திடீரென ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. இதனை கண்டித்து கர்நாடகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

மாண்டியாவில் 7-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று ஹெலிகாப்டர் மூலம் கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளை பார்வையிட்டார்.
அப்போது அணைகளின் நீர்ப்பாசன பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் கே.ஆர்.எஸ். அணை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து கர்நாடக அரசு நடப்பது அவசியமாகும். அது மாநில அரசின் கடமையும் கூட.
காவிரி பிரச்சினை தொடர்பாக நான் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமுகமாக தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். கர்நாடகத்திற்கு வாதாடும் மூத்த வழக்கறிஞர் நாரிமனுடன் இந்த பிரச்சினை குறித்து விவாதித்துள்ளேன். அவர் சரியான முறையில் வாதாடி வருகிறார். அவர் இங்குள்ள நீர் நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து பிரதமருக்கு வழங்க உள்ளதாக கூறியுள்ளார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications