மகாராஷ்டிராவில் பாஜக வென்றால் தேவேந்திர பட்னவிஸ்தான் முதல்வர்?
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவரான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக வாய்ப்பிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டவர் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே. அவர் மறைவைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் போட்டியில் நிதின் கட்காரி, தேவேந்திர பட்னவாஸ் பெயர்கள் அடிபட்டன.

அதே நேரத்தில் பாஜகவும் இதுவரை யாரையும் முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்தவும் இல்லை. சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் பாஜகவே ஆட்சி அமைக்கக் கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசியலுக்கு இனி திரும்பப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாஜக வென்றால் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு மிக நெருக்கமான தேவேந்திர பட்னவிஸ் முதல்வராகக் கூடும் என்று கூறப்படுகிறது. 44 வயதாகும் தேவேந்திர பட்னவிஸ் மீது இதுவரை எந்த புகாரும் இல்லை.
இதேபோல் ஹரியானா பாஜகவில் ராவ் இந்தர்ஜித்சிங் மற்றும் கேப்டன் அபிமன்யூ ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! பலருக்கு தீவிர சிகிச்சை! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications