அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசா? 'மோடியின் செப்டம்பர் ராஜினாமா' குறித்து தேவேந்திர பட்னாவிஸ்!
மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தமது 75 வயது நிறைவடையும் செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்வார்; புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பது குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ரகசிய ஆலோசனைகளை நடத்தி வருகிறது என உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்துகளை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: ஒரு குடும்பத்தில் அப்பா உயிருடன் இருக்கும் போது வாரிசு பற்றி யாரும் பேசுவார்களா? அதுபோல்தான்.. பிரதமர் நரேந்திர மோடி தற்போதும் மட்டுமல்ல 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்ற பின்னரும் பிரதமராக நம்மை ஆட்சி செய்வார். ஆகையால் பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்றார்.

முன்னதாக மும்பையில் செய்தியாளர்களிடம் சஞ்சய் ராவத் எம்பி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்றுதான் சென்றார். அங்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, தமக்கு செப்டம்பர் மாதம் 75 வயது நிறைவடைவதால் பதவியில் இருந்து விலக விரும்புவதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஓய்வு முடிவை ஏற்றுக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் புதிய பிரதமர் யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினர். பிரதமர் பதவியில் இருந்து மோடி ராஜினாமா செய்யும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர்தான் நாட்டின் புதிய பிரதமராவார். இவ்வாறு சஞ்சய் ராவத் எம்பி கூறினார். இதனைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் மறுத்துள்ளார்.
இந்த சர்ச்சை தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஹூசைன் தல்வாய் கூறுகையில், சஞ்சய் ராவத் கூறுவது சரியான கருத்துதான். பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டாலே ஓய்வு பெறுவது வழக்கம். பிரதமர் நரேந்திர மோடிக்கும் வயதாகிவிட்டது; ஆகையால் அவரும் தமது ஓய்வு குறித்து சிந்தித்திருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு. விஹெச்பி, பஜ்ரங்க் தள் போன்ற வன்முறை அமைப்புகளை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ்.தான் என்றார்.
அதேநேரத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, ஏற்கனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பவர்; முன்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அவரையே பிரதமராக்க விரும்பியதாகவும் கூறப்பட்டது. நிதின் கட்கரியே தம்மை பிரதமராக்க சிலர் விரும்பியதாக வெளிப்படையாகவே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications