ஹெச்.ஏ.எல்லின் “துருவ்” ஹெலிகாப்டருக்கு விரைவில் "ஈசா" தரச்சான்றிதழ்!
பெங்களூரு: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் பலகால கனவான ஈரோப்பியன் ஏவியேசன் சேப்டி ஏஜென்சி சான்றிதழ் இந்திய ராணுவத்தின் சிவில் வேரியண்ட் ஆப் அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டரான "துருவ்"விற்கு கிடைக்க உள்ளது.
சிறிது நாட்களுக்கு முன்னர்தான் ஹெச்.ஏ.எல், இண்டர்நேஷனல் சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷனுடன் இணைந்து மைசூர் ஏர்போர்ட்டில் இந்த சான்றிதழுக்கான விமான பரிசோதனையை வெற்றிகரமாக முடித்தது.

இச்சோதனைக்குப் பின்னர் ஈசா சான்றிதழ் பெருவதற்கு துருவ் தகுதி பெற்றுள்ளதாக இந்தியாவின் சிவில் ஏவியேஷன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிசோதனையின்போது அதன் உராய்வு திறன், பறக்கும் திறன், தரையிருந்து மேலேரும் திறன் ஆகியவை சோதித்துப் பார்க்கப்பட்டது. இதற்கு அனோடெக் கன்சல்ட்டிங் என்கின்ற ஸ்பானிஷ் நிறுவனம் வன்பொருள், மென்பொருள் ஆகியவற்றை வழங்கி இருந்தது.
ஓட்டப் பாதையின் தூரம், வடிவியல் அளவு ஆகியவையெல்லாம் இந்த பரிசோதனையில் சோதித்துப் பார்க்கப்பட்டன.
இச்சான்றிதழுக்காக 96 வகையான இரைச்சலுக்கான சோதனைகள் நிகழ்த்தப்பட்டன. கிட்டதட்ட 8 விமானங்கள் இந்த சோதனையில் கலந்து கொண்டன. ஈசா சான்றிதழைப் பெற பல்வேறு கட்ட சோதனைகளைக் கடந்து வரவேண்டும்.
"இவையெல்லாம் முக்கியமான சோதனைக் கட்டங்கள். ஈசாவிற்கான சோதனைகள் தனித்துவமாக இருக்க வேண்டியது அவசியம். ஹெலிகாப்டரின் வேலைத்திறன், எஞ்சினின் திறன், வைபரேஷன் ஆகியவை அவற்றில் சில" என்று துருவ் பற்றி அறிந்த ஹெ.ஏ.எல் ஊழியர் தெரிவித்துள்ளார்.
ஹெ.ஏ.எல்லின் 70 சதவீத ஈசா சான்றிதழுக்கான வேலைகள் முடிந்துவிட்டன. "இன்னும் சில சிறிய, சிறிய சோதனைகளே மீதமுள்ளன. எனினும், அடுத்த வருடம் கண்டிப்பாக துருவிற்கு ஈசா சான்றிதழ் கிடைத்துவிடும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில கோப்புகளும், பேப்பர் வேலைகளும் மீதமிருக்கின்றன. துருவ்விற்கு மட்டும் ஈசா சான்றிதழ் கிடைத்துவிட்டால் ஹெ.ஏ.எல்லிற்கு புதிய மதிப்பு கிடைத்துவிடும் என்பது கண்கூடான உண்மை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications