Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை ஆசையா கூப்பிட்ட காதலி.. காரில் ஒதுங்கிய ஜோடி.. டக்குனு பார்த்தால் அங்கே "8 கண்கள்".. இப்படி கூடவா

Subscribe to Oneindia Tamil

மும்பை: காதலியை வரச்சொன்னாராம்.. ஆசை ஆசையாக ஓடிப்போயிருக்கிறார் இந்த இளைஞர்.. கடைசியில் பார்த்தால் இப்போது அழுதுகொண்டு இருக்கிறார்.. என்ன காரணம்?
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. காதலி தனியாக அழைத்ததால், ஆசையுடன் சென்றதாக சொல்கிறார் அந்த இளைஞர்.. அவர் பெயர் பாலாஜி ஷிவ்பகத்.. ஷஹாபூரில் கன்ஸ்ட்ரக்‌ஷன் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த பாலாஜி, ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்துள்ளார்.. அந்த பெண்ணும் இவரை உயிருக்கு உயிராக விரும்பியிருக்கிறார்.. இந்த காதல் சில ஆண்டுகளாகவே நீடித்து வந்துள்ளது.. இருவருமே நெருங்கி பழகியுள்ளனர்..

Did 4 people attacked young man and what happened at dawn nirvana on the Thane highway

இந்நிலையில், கடந்த 28ம் தேதி, பாலாஜியை தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று காதலி அழைத்துள்ளார்.. இதற்காக ஷஹாபூரில் உள்ள அட்கான் ஹைவேஸ் பகுதிக்கு வர சொல்லி உள்ளார். அது நெடுஞ்சாலையாக இருந்தாலும்கூட, ஆள்நடமாட்டம் அவ்வளவாக இருக்காதாம்.. சாயங்காலம் 4.30 மணிக்கு வர சொல்லி உள்ளர்.. பாலாஜியும் அங்கு சென்றுள்ளார்.. அந்த பகுதியிலேயே, இருவரும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர்., அந்த நேரம் பார்த்து, திடீரென 4 பேர் அங்கே வந்திருக்கிறார்கள்..

அடித்து தாக்கினர்: பாலாஜியை வேகமாக பிடித்து தள்ளி, கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதனால் நிலைகுலைந்து போனார் பாலாஜி.. அதற்கு பிறகும் அவர்கள் விடவில்லை.. பாலாஜியை இரவெல்லாம் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள்.. விடிகாலை நேரத்தில், பாலாஜியின் ஆடைகளை மொத்தமும் கழற்றிவிட்டு, அந்த ஆடைகளை ஷாஹாப்பூர் ஹைவேஸ் பகுதியில் வீசிவிட்டு சென்றார்கள்.. இதனால், நிர்வாணமாகவே ரோட்டில் தள்ளாடி வந்துள்ளார்..

உடம்பெல்லாம் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.. 2 நாட்கள் ஐசியூவில் தீவிர சிகிச்சை தரப்பட்டுள்ளது.. அதற்கு பிறகுதான், உயிர் பிழைத்துள்ளார்.. போலீசாருக்கு விஷயம் தெரிந்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. இப்போதும்கூட, அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து பாலாஜி இன்னமும் மீளவேயில்லையாம்.

துரோகம்: அந்த 4 பேரும், காதலியின் நண்பர்களாம்.. இந்த சம்பவம் குறித்து பாலாஜி சொல்லும்போது, "அவளை நான் தீவிரமாக காதலிச்சேன்.. அவளுக்காக எல்லாத்தையும் செய்தேன்.. ஒரு வீடு கேட்டாள்.. அவள் தங்குவதற்காக என்னால் முடிந்த சிறிய வீட்டை கட்டித்தந்தேன்.. அவளுக்கு எது பிடிக்குமோ அதையெல்லாம் செய்தேன்.. இருந்தாலும் எனக்கு துரோகம் பண்ணிட்டாள்.. வேறொருவருடன் சேர்ந்து என்னை அவளும் சேர்ந்து தாக்கினாள்..

சம்பவத்தன்று, அவள்தான் என்னை சந்திக்க வரச்சொன்னாள்.. ஆனால் வரும்போது, ஒரு புடவை, தங்க கம்பல், கொலுசுகள் மற்றும் வளையல், குடையுடன் வந்து சந்திக்க சொன்னாள்.. நானும் அவள் கேட்டதையெல்லாம் வாங்கி கொண்டுபோனேன்.. 2 பேரும் காரிலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.. திடீர்னு 4 பேர் என்னை அடித்தார்கள்.. என் காரிலேயே என்னை கடத்தி சென்றார்கள்.. பக்கத்திலேயே ஒரு ஹோட்டல் இருந்தது..

அந்த ஹோட்டலுக்குள் தரதரவென இழுத்து சென்று, அங்கேயும் இரவெல்லாம் வைத்து தாக்கினார்கள். என்னை நிர்வாணமாக்கி போட்டோ, வீடியோவையும் எடுத்துக் கொண்டனர்..

மோதிரம்: என்னிடமிருந்த தங்கச்சங்கிலி, 7 மோதிரம் போன்றவற்றை பறித்துகொண்டு, என் கண்ணிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு, நிர்வாணமாகவே நடுரோட்டில் இறக்கிவிட்டு போய்விட்டார்கள்.. நான்தான், தள்ளாடியபடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன்.. அங்கிருந்து என்னுடைய நண்பனுக்கு போன் செய்தேன்.. நண்பன்தான் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால், எதற்காக என்னை எல்லாரும் சேர்ந்து அடித்தார்கள் என்று இப்போது வரை தெரியவில்லை" என்றார்..

பரபரப்பு: இந்த சம்பவம் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அந்த இளம்பெண்ணையும், அவரது 4 ஆண் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+