தெய்வமே நீங்களா? அதுவும் நடுத்தெருவில்? கிட்ட போய் உற்றுப்பார்த்த தம்பதி.. அதென்ன உடம்பெல்லாம் முடி?
காந்தி நகர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இதை பார்த்த நெட்டிசன்கள், ஒரு நொடி பதறி துடித்துவிடுகிறார்கள்.. கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஏன் தெரியுமா?
சோஷியல் மீடியாவில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி, அது உடனுக்குடன் ட்ரெண்டாகிவிடும்.. அதுபோலவே, இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி விடுவதுண்டு.

வீடியோக்கள்: அதேபோல வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் போட்டோக்களும்கூட, இணையவாசிகளை அபரிமிதமாக கவர்ந்துவிடும். இப்போதும் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. ஆனால், இதைப்பார்த்ததுமே நெட்டிசன்கள் ஒரு செகண்ட் ஆடிப்போய்விட்டார்கள்.
வழக்கமாக ஆளில்லாத தெருக்களில், இரவு நேரங்களில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.. இந்த நாய்கள், ஆட்கள் தெருவில் நடந்து போனாலோ அல்லது பைக்குகளில் போனாலோ, பின்னாடியே பின்தொடர்ந்து ஓடிவந்து குரைக்கும்.. தெரிந்த நபர்களே என்றாலும், நாய்கள் இரவு நேரத்தில் இப்படி விரட்டிக் கொண்டே வருவதுண்டு. இதனால், இரவு நேரங்களில் தெருக்களில் யார் சென்றாலும், இந்த நாய்களை நினைத்து ஒருவித பயத்துடனேயே செல்ல வேண்டியதாயிருக்கு.
தெருவிளக்குகள்: சில தெருக்களில், விளக்குகள்கூட எரிவதில்லை.. இதனால் தெருக்களில் திருட்டு பயத்தையும் கருத்தில் கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது.. அப்படித்தான், குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள நவாபந்தர் கிராமத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஸ்ரீ ராம் கோவில் அருகே இரவு 11 மணிக்கு, நடுத்தெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அன்றைய தினம் இரவு, ஒரு தம்பதியினர் அந்த கிராமத்தின் வழியாக பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.. இரவு நேரம் என்பதால், அந்த பகுதியே இருட்டில் மூழ்கி கிடந்தது.. தம்பதி இருவரும் பைக்கில் வந்தபோது, திடீரென ஒரு மிருகம் அவர்கள் எதிரே வந்துள்ளது..
குழப்பிய உருவம்: தெருவில் தூரத்திலேயே அந்த பெரிய உருவத்தை பார்த்து, எவ்வளவு பெரிய தெரு நாய்? என்று ஆச்சரியமாக பார்த்துள்ளனர்.. பிறகு பைக்கை ஓட்டிக் கொண்டே அதன் அருகில் சென்றபோதுதான், அது தெரு நாய் கிடையாது, வேறு ஏதோ உருவம் போல இருக்கிறதே? என்று குழம்பினார்கள்..
ஆனால், அந்த மிருகத்தை கடந்துதான், பைக்கில் செல்ல வேண்டும் என்பதால், இன்னும் முன்னோக்கி சென்றனர்.. அந்த மிருகத்தின் கிட்ட போனதும்தான், அதன் உடலிலிருந்த பிடரியை பார்த்து பதறிவிட்டார்கள்.. இந்த தம்பதியை வழிமறித்து 100-200 அடி தூரத்தில் ஒரு ஆண் சிங்கம் நின்று கொண்டிருந்ததை கண்டு, பயத்தில் இருவருமே நிலைகுலைந்துவிட்டனர்.
பிடரி சிங்கம்: சிங்கத்தை கிட்ட பார்த்துமே, பைக்கின் பின்னாடி உட்கார்ந்திருந்த பெண், வேகமாக குதித்து இறங்கி, மின்னலென ஓடிப்போனார். அதேபோல கணவன், பைக்கை அணைக்காமல், விளக்கையும் அணைக்காமல், ஸ்டாண்டை போட்டு நிறுத்திவிட்டு, அவரும் மெல்ல இறங்கி ஓடினார்.. கணவன், மனைவி ஆளுக்கு ஒருபக்கம் தப்பிச்சென்ற நிலையில், அந்த சிங்கமோ அவர்கள் இருவரும் ஓடியதை பார்த்து துரத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தது.
#Viral_Video: रात के अंधेरे में बाइक से कहीं जा रहा था कपल, दिखी ऐसी खतरनाक चीज कि गाड़ी छोड़ भागने पर हुए मजबूर !!
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) October 10, 2024
वायरल हो रहे वीडियो में एक शख्स अपनी पत्नी के साथ बाइक से कहीं जा रहा होता है कि अचानक उनकी नजर सामने से आ रहे शेर पर पड़ जाती है. खतरनाक शेर को सामने देखते ही कपल… pic.twitter.com/xibdASmWFT
பிறகு, மெதுவாக, அந்த தெருவில் அது பாட்டுக்கு நடந்து சென்றது.. இந்த காட்சிதான், அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருக்கிறது. அந்த தம்பதியினரை சிங்கம் எதுவுமே செய்யவில்லை, பார்ப்பதற்கும் அமைதியாக காணப்படுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் உற்று பார்த்தபோதுதான், கணவன் - மனைவி ஓடியதை போலவே, அங்கிருந்த தெருநாய் ஒன்றும் விழுந்தடித்து ஓடியிருக்கிறது.
பிரகாசமாக எரிந்த விளக்கு: பைக்கின் லைட் பிரகாசமாக எரிந்துகொண்டிருந்ததால், சிங்கம் அந்த தெருவில் நிற்பதும், மெதுவாக நடந்து வருவதும், சிசிடிவி கேமராவில் இன்னும் பிரகாசமாக பதிவாகியிருக்கிறது.. அந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. வீடியோவை பார்த்த மொத்த பேரும் பதறிப்போய்விட்டார்கள். "இந்த சம்பவத்தை நல்லது என்பதா? கெட்டது? என்பதா? தெரியவில்லை.. ஆனால், கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்" என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications