பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குண்டு பாய்ந்து உயிரிழப்பு.. தவறுதலாக சுட்டுக்கொண்டாரா? என்ன நடந்தது?
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏ துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். பஞ்சாப் லூதியானா தொகுதி எம் எல் ஏவான குர்பிரீத் பாஸ்ஸி கோகி தனது துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக சுட்டதில் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. எம் எல் ஏ ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக பகவத் மான் உள்ளார். இந்த நிலையில் லூதியானா தொகுதி எம் எல் ஏவாக இருக்கும் குர்பிரீத் மாஸ்ஸி கோகி இன்று அவரது வீட்டில் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட தகவலில் ஆம் ஆத்மி எம் எல் ஏ குர்பிரீத் மாஸ்ஸி கோகி துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக குண்டு உடலில் பாய்ந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "ஆம் ஆத்மி எம்.எல்.ஏ உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது பிரதே பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும். நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடியவரை மீட்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், எம்.எல்.ஏ குர்பீரித் கோகாய் அறையில் இருந்து திடீரென துப்பக்கி குண்டு சத்தம் கேட்டதால் அவரது அறைக்கு சென்று பார்த்ததாகவும் அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் படுக்கையில் கிடந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த குர்பிரித் கோகி?
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியில் குர்பிரீத் கோகி இணைந்தார். லூதியானா தொகுதியில் போட்டியிட்ட குர்பிரித் கோகி, அந்த தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவரும் முன்னாள் அமைச்சருமான பாரத் பூஷன் அஷுவை தோற்கடித்து பஞ்சாப் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
லூதியானா மேற்கு நகராட்சியில் மூன்று மூறை தொடர்ந்து கவுன்சிலராகவும் இவர் இருந்துள்ளார். 2007-2012, 2012-2017, 2017-2022 வரை கவுன்சிலராக இருந்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications