பீஸ் பீஸா போச்சே.. "மாமியாரை" கட்டிப்பிடித்து.. பக்கத்துல மருமகளா? வீடியோ போட்ட மகனின் "வெறித்தனம்"
கான்பூர்: மாமியாரும், மருமகளும் கட்டிப்பிடித்து புரண்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? யார் இவர்கள்?
உத்தரபிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.. பிஞ்சு குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. இளம்பெண்கள் மீது பாலியல் வக்கிரங்களும் அதிகரித்து வருகின்றன.
अलीगढ़ सास ने की बहू के साथ जमकर मारपीट, सास की हैवानियत का वीडियो आया सामने,बहू के तीन बेटियां पैदा होने पर सास बहू के साथ करती है मारपीट,बेटा पैदा नहीं होने से नाराज है सास,गांधीपार्क इलाके के डोरीनगर का बताया जा रहा है वीडियो,@aligarhpolice @adgzoneagra @Uppolice @dgpup pic.twitter.com/ay04DFWQuk
— Sunder Singh (@sundertv9) July 25, 2023
அதேபோல, குடும்ப வன்முறைகளும் பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் கொடுமை என்னவென்றால், பெண்களுக்கு பெண்களே எதிரியாகிவிடுவதுதான்.
ஆண் வாரிசு: குறிப்பாக, "ஆண் வாரிசு" பெற்று தராத மருமகள்கள், கொடூரமான மாமியார்களின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறார்கள்.. இந்த விஷயத்தில் மட்டும் இந்தியாவில் பாகுபாடே கிடையாது. ஆண் குழந்தை மீதான மோகத்தினால், இளம் மருமகள்கள், புகுந்த வீட்டில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் தற்கொலைகளை நாடி வருகிறார்கள். இந்த அபலைகளை காப்பாற்ற ஒருவரும் இன்னும் பூமியில் பிறக்கவில்லை.
பரிதாபம்: ஒருபக்கம் அம்மா, மறுபக்கம் மனைவி என இவர்களுக்கு நடுவில் பரிதாபமாக மாட்டிக்கொண்டு விழிப்பதே, இந்திய ஆண்மகன்களின் துயரமாக நீண்டுவருகிறது. இதோ ஒரு கொடுமை மறுபடியும் உத்தரபிரதேசத்திலேயே நடந்துள்ளது பாருங்கள்..
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அலிகார்க் மாவட்டம், டோரி நகர், காந்திபார்க் தெருவில் வசித்து வருகிறார்கள் அந்த இளம் தம்பதியினர்.. கணவர் பெயர் அர்விந்த் குமார். மனைவி பெயர் ப்ரீத்தி தேவி.. கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர்... ஆனால், ஆண்வாரிசு இல்லையே என்ற ஆத்திரம், பெண்ணின் மாமியாருக்கு இருந்துள்ளது..

தகராறுகள்: ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், அது ஆணாக இருக்க வேண்டும் என்று ஆசையாக போய் பார்ப்பாராம்.. ஆனால் பிறந்திருப்பது பெண் குழந்தை என்றதுமே, முகம் கடுகடுவென மாறிவிடுமாம். 3 பிரசவத்திலும், மருமகள் பெண் குழந்தைகளை ஈன்றெடுத்ததால், மொத்த கோபமும், மருமகள் மீது திரும்பிவிட்டது.. ஆமா, எதுக்காக, உனக்கு எப்ப பார்த்தாலும் பெண் குழந்தையாக பிறக்கிறது? என்று கேட்டு சண்டையை ஆரம்பித்துள்ளார் மாமியார்.
இதைக்கேட்டு அதிர்ந்த மருமகள், இதுக்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும்? என்று பதிலளித்துள்ளார்.. ஆனாலும், ஆத்திரம் அடங்காத மாமியார், வாக்குவாதத்தை அதிகப்படுத்தினார்.. ஆவேச வார்த்தைகளை வீசினார்.. அசிங்க அசிங்கமாக பேச ஆரம்பித்தார்.. இதனால் பொறுமையிழந்த மருமகளும் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தார்..
தலைமுடிகள்: ஒருகட்டத்தில், மருமகளும், மாமியாரும் மல்லுக்கட்ட துவங்கிவிட்டனர்.. அடுத்து குடுமிப்பிடி சண்டை துவங்கியது.. அடுத்து கட்டிப்புரண்டு உருண்டார்கள்.. தலைமுடிகளை பிடித்து இழுத்து ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டார்கள்..
இதெல்லாம் பார்த்து இவர்களின் பெண் குழந்தைகளோ, பயந்து அலறி கொண்டிருந்தன.. இவ்வளவு வெறித்தனமாக தாயும், மனைவியும் சண்டைபோட்டுக் கொண்டிருந்தால், அந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா? ஓடோடி போய், செல்போனில் இந்த சண்டையை வீடியோ எடுக்க ஆரம்பித்துவிட்டார்.
வைரல் வீடியோ: அம்மாவையும் விலக்கிவிடவில்லை, மனைவியையும் சமாதானப்படுத்தவில்லை.. வீடியோவை லைவ்-ஆக சோஷியல் மீடியாவில் போட்டுவிட்டார்.. அத்துடன், ரன்னிங் கமெண்ட்ரியும் தரதுவங்கினார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. வீடியோதான் வைரலாகிறதே தவிர, கடைசியில் அந்த குடுமிப்பிடி சண்டை என்ன ஆச்சு என்றே தெரியவில்லை...!!












Click it and Unblock the Notifications