சொல்ல சொல்ல கேக்கலியே.. மோசமா டிரஸ் அணிந்த மனைவி.. கடுப்பில் கணவர் செய்த பகீர்.. பக்கத்திலேயே சடலம்
மனைவி ஆபாசமாக டிரஸ் அணிந்ததால் கணவர் செய்த பகீர் காரியம் உபியை மிரள செய்துவருகிறது
கான்பூர்: இளம்மனைவி சப்னாவிடம் பலமுறை அட்வைஸ் தந்தும் கணவர் பேச்சை அவர் காதுகொடுத்து கேட்கவில்லை.. இதையடுத்து, நடந்த அதிர்ச்சி சம்பவம்தான் பலரையும் விக்கித்து போக வைத்து வருகிறது.
பொதுவாக, ஆடைகள் அணிவது தொடர்பான விவாதங்கள் எல்லா காலங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. எங்கேயும் எப்போதும் பெண்களை துரத்தும் ஆடைக் கட்டுப்பாடு குறித்த அலசல்களும் வெடித்தபடியே இருக்கின்றன..
ஆடைக் கட்டுப்பாடு என்பது பிற்போக்குத்தனமானது, ஆடை விஷயத்தில் பெண்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒருபக்கம் எழுந்தபடியே உள்ளன.

கலையும் ஆடை
"உரிமை" என்பது சுய ஒழுங்குகளையும் கண்ணியத்தையும் பாழ்படுத்துவதாக இருத்தல் கூடாது, அவ்வகையில் உள்ளவை எவ்வளவு பெரிய உரிமையாக இருந்தாலுமே அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தமாக மறுபக்கம், பலர் பதிவு செய்து வருகிறார்கள்.. எனினும், ஆடை கட்டுப்பாடு, ஆடை சுதந்திரம் போன்ற விஷயங்களில் புரிதல் குறைபாடுகள் இன்னமும் உள்ளதாலேயே இதுபோன்ற குடும்ப வன்முறைகள் பெருகி வருவது வருத்தத்தை தந்துவருகிறது.. அந்தவகையில், கடந்த மாதம் நம்முடைய கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் எபனேசர்..

பியூட்டிஷியன்
சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். மனைவி பெயர் ஜெப பிரின்ஷா.. 31 வயதாகிறது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இத்தனை நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கிகிடந்த ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசை வந்துவிட்டது.. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார்... இது ஒரு வருட கால பயிற்சி ஆகும்.. ஆனால், இந்த கிளாஸுக்கு சென்ற மாதங்களிலேயே வீட்டில் பிரச்சனை வெடித்தது.. திருவனந்தபுரம் சென்று வருவதாலும், பியூட்டிஷியன் கோர்ஸ் என்பதாலும், மார்டன் டிரஸ் அணிந்து சென்றுள்ளார் ஜெப பிரின்ஷா..

மார்டன் டிரஸ்
வழக்கத்துக்கு மாறாக, அலங்காரமும், ஆடைகளையும் பார்த்து கணவர் எபனேசர் அதிர்ந்து போனார்.. மனைவியை கண்டித்தார்.. இப்படியெல்லாம் மோசமாக ஆடைகளை அணிந்து, வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும், ஜெப பிரின்ஷா விளக்கம் தந்துள்ளார்.. எனினும், ஒருநாள் ஆத்திரமடைந்த எபனேசர், அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டி கொன்றே விட்டார்.. மார்டர்ன் டிரஸ் அணிந்ததற்காக, மனைவியை அரிவாளால் வெட்டி கொன்ற இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் குமரியை விட்டு போகவில்லை. மார்டன் டிரஸ் அணிந்ததற்கே இப்படி கொலை வரை சென்றுள்ளது என்றால், கண்ணை உறுத்தக்கூடிய அளவுக்கு மோசமான ஆடைகளை தன் மனைவி அணிந்தால்?? இதோ உபியில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஆடை சப்னா
உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காஜிபூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மோஹித் குமார்... இவரது மனைவி பெயர் சப்னா.. 28 வயதாகிறது.. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.. இத்தனை வருடமாக மகிழ்ச்சியுடன் இவர்கள் திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென சப்னாவின் டிரஸ் மூலம் தகராறு வெடித்துள்ளது.. சப்னா, கிளாமராக மார்டன் டிரஸ் அணிய ஆரம்பித்துள்ளார்.. சப்னா இப்படி ஆடை உடுத்துவது மோஹித்துக்கு பிடிக்கவில்லை.. அதனால், இது தொடர்பாக தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுகூட, தகாத முறையில் சப்னா ஆடை உடுத்தியதாக தெரிகிறது.

சப்னா சடலம்
இதனால், மறுபடியும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மோஹித், கத்தியை எடுத்துவந்து சப்னாவின் கழுத்தில் ஆவேசமாக குத்தினார்.. இதில் ரத்தவெள்ளத்தில் சப்னா அங்கேயே சரிந்துவிழுந்தார்.. சப்னாவின் அலறல் கேட்டு, பக்கத்து வீட்டு நபருக்கு சந்தேகம் வந்தது.. அதனால், வீட்டுக்குள் வராமல், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.. போலீசார் விரைந்து வந்து பார்த்தபோதுதான், சப்னா இறந்துகிடந்தது தெரியவந்தது.. சப்னாவின் சடலம் பக்கத்திலேயே, வெறித்து பார்த்தபடி, மோஹித் அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாராம்..

அட்வைஸ் டிரஸ்
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போதுதான், மோஹித் எல்லா விவரங்களையும் சொல்லி உள்ளார்.. வீட்டிற்குள் எப்படி வேண்டுமானாலும் டிரஸ் செய்து கொள்ளட்டும், ஆனால், பொது இடங்களில் தகாத முறையில் டிரஸ் அணிய வேண்டாம் என்று பலமுறை எச்சரித்தும் சப்னா கேட்வில்லை.. ஆரம்பத்தில் அட்வைஸ் செய்தேன்.. நாளடைவில்தான் அது தகராறாக உருவெடுத்துவிட்டது.. அந்த தகராறில்தான் ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டதாகவும் மோஹித் போலீசிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.. எனினும், ஆடை அணிவது தொடர்பாக, தொடர்ந்து இளம்பெண்கள் கொல்லப்பட்டு வருவது கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications