வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே நாகலாந்தில் பாஜகவிற்கு ஒரு எம்எல்ஏ.. எப்படி சாத்தியமானது?
நாகலாந்து மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக ஒரு எம்எல்ஏவை வைத்திருக்கிறது.
அகர்தலா: நாகலாந்து மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக ஒரு எம்எல்ஏவை வைத்திருக்கிறது.இது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்ப்போம்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த பிப்ரவிரி 27-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது.

59 தொகுதிகள்
இதில் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ திடீரென காலமானார். இதனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேகாலயாவில் 85 சதவீத வாக்குகள் பதிவானது.

பாஜக கணக்கு
நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய பாஜக எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் காக்கசே சுமி கடைசி நேரத்தில் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

27 ம் தேதி தேர்தல்
இதனால் தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறாமலேயே பாஜகவின் காஜெட்டோ கினிமி வெற்றி பெற்றார். இதன் மூலம் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்பே நாகலாந்தில் பாஜக ஒரு சீட்டை வென்று கணக்கை தொடங்கி உள்ளது.இதனிடையே நாகலாந்து மாநிலத்தில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது.

முன்னிலை எப்படி
இதில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. நாகாலாந்தில் முதல்-மந்திரி நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடக்கிறது. இங்கு என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் என்.டி.பி.பி-பா.ஜ.க. கூட்டணியே மூன்று இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த எண்ணிக்கை கூடும் என தெரிகிறது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications