காதலன் இல்லாத கவலையா.. வாடகைக்கு ரெடியாக இருக்கும் குர்கான் வாலிபர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தன்னை வாடகைக்கு எடுக்குமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்த வாலிபன்..

  குர்கான்: காதலர் தினத்தன்று கைகளை பிடித்துக் கொண்டு செல்வது முதல் என்ன வேண்டுமானாலும் செய்வது வரை 4 வித்தியாசமான பேக்கேஜுகளுடன் வாடகைக்கு வர தயாராக உள்ளதாக குர்கான் இளைஞர் ஒருவரின் பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

  இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் காதலர்கள் காதலிகளுக்கு கொடுப்பதற்காக அனைத்து மார்க்கெட்டுகளில் வித்தியாசமான ரோஜா மலர்கள் லாரி லாரியாக வந்து இறங்கியுள்ளன.

  ஹாங்காங்கில் டேட்டிங் செல்வதற்காக ஒரு நிறுவனத்தில் பணம் செலுத்திவிட்டு இளசுகள் காத்திருப்பதாக செய்திகளை படித்துள்ளோம்.

  குர்கான் இளைஞர்

  குர்கான் இளைஞர்

  குர்கான் இளைஞர் ஒருவர் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் தான் வாடகைக்கு பாய்பிரண்டாக வர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அதுவும் வித்தியாசமான பேக்கேஜ்களுடன் ஆஃபர் வழங்கியுள்ளார்.

  என்ன பதிவு

  என்ன பதிவு

  டெல்லியில் உள்ள குர்கானை சேர்ந்த தொழிலதிபர் ஷாகுல் குப்தா (26). இவர் பெண்கள் தன்னுடன் கைகோர்ப்பது முதல் தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று 4 அதிரடி பேக்கேஜ்களை கொடுத்துள்ளார்.

  ப்ரோமோ கோடு

  ப்ரோமோ கோடு

  'RICHGUY'என்ற ப்ரோமோ கோடை பயன்படுத்தினால் வாடகை கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி செய்கிறாராம். மேலும் ஆடி காரில் இலவச ரைடும் உண்டாம். அதேநேரத்தில் சில கண்டிஷன்களும் உண்டு. கரப்பான் பூச்சிகளிடம் இருந்து "காதலியை" காப்பாற்ற மாட்டார். பேஷன் மற்றும் அல்லது அழகு குறித்தும் பேசமாட்டாராம். மேலும் கடல் உணவுகளை அறவே உண்ண மாட்டாராம். இதற்கு ரெடி என்றால் டேட்டிங் செல்ல தானும் ரெடி என்கிறார் அந்த இளைஞர்.

  என்ன செய்யலாம்

  என்ன செய்யலாம்

  பேக்கேஜ் 1 : கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, பேக்கேஜ் 2: கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, கட்டி அணைப்பது, கன்னத்தில், நெற்றியில் முத்தம் கொடுப்பது, பேக்கேஜ் 3 : கையை பிடித்துக் கொள்வது, தோளில் கை போடுவது, கட்டி அணைப்பது, கன்னத்தில், நெற்றியில், உதட்டில் முத்தம் கொடுப்பது, பேக்கேஜ் 4: உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்வது ஆகிய 4 பேக்கேஜ்களை கொடுத்துள்ளார்.

  பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

  பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

  தனது பேக்கேஜ்கள், கண்டிஷன்களுக்கு ஒப்புக் கொள்வோர் தன்னை https://www.facebook.com/shakul.gupta.395 என்ற பேஸ்புக் முகவரியிலும், shakulgupta என்ற இன்ஸ்டாகிராம் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

  குப்தா விளக்கம்

  குப்தா விளக்கம்

  இந்த பதிவை பார்த்தவுடன் ஆயிரக்கணக்கான பதில்களும் ஷேர்களும் செய்யப்படும் போதிலும் இதெல்லாம் சும்மா விளையாட்டுக்காக என்று குப்தா கூறியுள்ளார். மேலும் காதல் என்பது இறைவன் கொடுத்த வரம் என்றும் அதை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Shakul Gupta, a Gurgaon-based entrepreneur, is all ready to rent himself out and provide four packages on Valentine’s Day this year.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற