சொகுசு டூ அதிசொகுசு: புதுவையில் இருந்து 'ஆரஞ்ச் கவுன்டி கூர்க்'கில் தினகரன் எம்.எல்.ஏக்கள் 'டேரா'
புதுவையை காலி செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் கூர்க்கில் முகாமிட சென்றுள்ளனர்.
பெங்களூரு: புதுவை விண்ட் ப்ளவர் சொகுசு விடுதியை காலி செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தற்போது கர்நாடகாவின் கூர்க் மலைவாசஸ்தலத்தில் உள்ள அதிசொகுசு ரிசார்ட்டான 'ஆரஞ்ச் கவுன்டி' கூர்க்கில் முகாமிட்டுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவை விலக்கிக் கொண்ட தினகரன் ஆதரவு 19 அதிமுக எம்.எல்.ஏக்கள் கடந்த 17 நாட்களாக புதுவை சொகுசு ரிசார்ட் மற்றும் ஹோட்டல்களில் முகாமிட்டிருந்தனர். ஆனாலும் எம்.எல்.ஏக்கள் நினைத்தபடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்படவில்லை.

ஜக்கையன் ஜம்ப்
இந்நிலையில் தினகரன் ஆதரவு முகாமில் இருந்து கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் தப்பி ஓடி முதல்வர் எடப்பாடி அணியில் ஐக்கியமாகிவிட்டார். இதையடுத்து புதுவையை காலி செய்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் அடைக்கலம்
கர்நாடகா மாநில மலைவாசஸ்தலமான கூர்க்கில் 18 எம்.எல்.ஏக்கள் முகாமிட்டுள்ளனர். முதலில் இந்த எம்.எல்.ஏக்கள் மைசூரில் தங்கியிருப்பதாக கூறப்பட்டது. தற்போது கூர்க் சென்றுள்ளது உறுதியாகி உள்ளது.

கட்டுப்பாட்டில்...
புதுவையில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்த விண்ட் ப்ளவர் சொகுசு ரிசார்ட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 'எஸ்ஆர் குரூப்ஸ்' குழுமங்களுக்கு சொந்தமானதுதான் ஆரஞ்சு கவுன்டி கூர்க். 'எஸ்ஆர் குரூப்ஸ்' மூலமே முன்பதிவு செய்யப்படுகிறது.

அதிசொகுசு ரிசார்ட்
இந்த அதிசொகுசு ரிசார்ட் காட்டேஜ்களில் ஒரு இரவுக்கு ரூ33,000 முதல் ரூ67,000 வரை கட்டணம். இந்த காட்டேஜ்களில் அத்தனை "சொகுசு" வசதிகளும் தாராளமாக கிடைக்கும்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications