சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்ட தினகரன் தரப்பு.. காரணம் இதுதான்!
Recommended Video

டெல்லி: தவறான தகவலை அளித்ததால் சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பு மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் சென்னை ஹோகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக, விமலா நியமிக்கப்பட்டார்.
ஆனால், நீதிபதி விமலா இந்த வழக்கை விசாரிக்க கூடாது என கூறி தினகரன் ஆதரவு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நீதிபதி விமலா
இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலாவுக்கு பதில் நீதிபதி சத்யநாராயணன் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு விசாரணை விமலா அமர்வில் நடக்க கூடாது, ஏனெனில், நீதிபதி விமலாவின் உறவினர் தமிழக அரசின் வழக்கறிஞராக உள்ளார் என்று தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் முன் வைத்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஹைகோர்ட் விசாரிக்கும்
அதேநேரம், ஹைகோர்ட்டுக்கு பதில் உச்சநீதிமன்றமே நேரடியாக விசாரிக்க வேண்டும் என்ற தினகரன் தரப்பு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது. எனவே சத்யநாராயணன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெறும்.

நீதிபதிகள் கண்டனம்
இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில், ஹைகோர்ட் 6 மாத காலத்திற்கு பிறகு தாமதமாக தீர்ப்பு வழங்கியதாக தினகரன் தரப்பு தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தவறானது என்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் குறுக்கிட்டு தெரிவித்தார். 2018, ஜனவரி 23ம் தேதி இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, 4 மாதங்கள் 3 வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என கண்டனத்தை தெரிவித்தனர் நீதிபதிகள்.

மன்னிப்பு
இதையடுத்து வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிபதிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தாங்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுவதாக கூறி வாபஸ் பெற்றார். நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், சென்னை ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications