ஆட்சி கவிழும், தினகரன் முதல்வராவார்: சுப்பிரமணிய சாமி ஆரூடம்
அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, விரைவில் தினகரன் முதல்வராகி விடுவார் என கூறியுள்ளார்.
டெல்லி: விரைவில் தமிழக அரசு கவிழும் என்றும் அதன் பின் தினகரன் முதல்வராகி விடுவார் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்வதில் சுப்பிரமணிய சாமிக்கு நிகர் அவர் தான். ஆனால் அந்த கருத்தை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். இருந்தாலும் தன்னுடைய கருத்தை அவர் தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டே தான் இருப்பார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த சாமி, விரைவில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களைப் பார்த்தால் அப்படி தான் உள்ளது. விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும், தினகரன் முதல்வராகி விடுவார், அதனால் அதிமுகவை விரைவில் இணைக்கப்பாருங்கள் என்று சுப்பிரமணிய சாமி டுவிட் செய்திருந்தார்.
Judging by outcome of ADMK legislature party meeting today the fall of Palanisamy Govt seems imminent. TTVD May become CM. Better unite soon
— Subramanian Swamy (@Swamy39) January 3, 2018
சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் ஆட்சி கவிழும் என தினகரனும் கூறி வந்த நிலையில், சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட்டில் அர்த்தம் உள்ளதாக கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே தினகரனுக்கு ஆதரவாக பேசி வரும் சுப்பிரமணிய சாமி, ராமன் வாலிக்கு உதவாமல் ஏன் சுக்ரீவனுக்கு உதவினான் என ராமாயணத்தை படித்து பாருங்கள் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications