வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது!
வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக எரியோடு போலீசார் 10 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளப்பிவிட்டனர் பாஜகவினர். ஆனால் அப்படி யாரும் தமிழ்நாட்டில் தாக்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு போலீசார் உறுதி செய்தனர். வட இந்தியாவில் இருந்து வந்த பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு குழுக்களும் இதனை உறுதி செய்தனர்.

அதேநேரத்தில் வட இந்தியர் விவகாரத்தில் வதந்தி பரப்பிய பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, வட மாநில தொழிலாளர்கள் மீது கஞ்சா கேஸ் போடுவோம்; பலாத்கார வழக்கு போடுவோம்; தனி ரயிலில் விரட்டி அடிப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. சீமானின் இந்த பேச்சை பீகார் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சீமான் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனை கடுமையாக விமர்சித்துள்ள சீமான், வட மாநில இளைஞர்களால் தமிழர்கள் தாக்கப்படுகின்றனர்; கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டது என கூறியிருந்தார்.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோட்டில் கஞ்சா விற்பனை செய்த 10 பேர் கும்பலை எரியோடு சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக எரியோடு போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், எரியோடு நால்ரோடு பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றித் திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வேடசந்தூர், வடமதுரை, திண்டுக்கல்லை சேர்ந்த இந்த 10 பேர் கொண்ட கும்பல், வேடசந்தூர் தாலுகாவில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது. அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விநியோகித்து வந்தனர். அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றனர்.
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்












Click it and Unblock the Notifications