மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்ததால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும்: ஏ.கே.அந்தோணி

Subscribe to Oneindia Tamil

Disaster for country if BJP comes to power: A K Antony
திருவனந்தபுரம்: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தலையொட்டி, கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் வடகரை தொகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அந்தோணி பேசியதாவது :

லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று வெளியாகும் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பிரபல 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் செய்யும் வணிக யுக்தி . கேரளாவில் கடந்த 2009-ம் ஆண்டு வென்றதை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்தால், நாடு பேரழிவை சந்திக்க நேரிடும். அனால் அது போல் நடக்க மக்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

அடுத்து அமையப்போகும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளதைப் போல் மக்களின் மருத்துவ உரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+