சொத்துக்குவிப்பு வழக்கில் ஹரியானா மாஜி முதல்வர் சவுதாலா ஜாமீன் ரத்து.. மீண்டும் சிறைவாசம்
சண்டீகர்: சொத்துக் குவிப்பு வழக்கில், வழங்கிய ஜாமீன் பிணையை திரும்ப பெறுவதாக பிணை கொடுத்த நபர் கூறியதையடுத்து, ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் (ஐ.என்.எல்.டி.) தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஐந்து முறை முதல்வராக இருந்த பெருமைக்குரியவர்.

இந்நிலையில், 1999-2000ல் அவர் முதல்வராக இருந்தபோது ஆசிரியர் நியமனத்தில், பணம் பெற்றுக்கொண்டு வேண்டியவர்களுக்கு வேலை நியமனக் கடிதம் கொடுத்ததாக ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஊழல்களால் அவர் சொத்து குவித்ததும் அம்பலமானது.
வழக்கை விசாரித்த டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு அவருக்கும் அவரது மகனுக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
81 வயதாகும் சவுதாலா தனது வயதையும் ஒரு காரணமாக காண்பித்து ஜாமீன் கேட்டிருந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது, சுர்ஜித் சிங் என்பவர், சவுதாலாவுக்காக பிணை கொடுத்திருந்தார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக, பிணையை வாபஸ் பெற விரும்புவதாக சுர்ஜித் சிங், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இன்று இவ்விசாரணை நடந்தபோது சவுதாலாவும் கோர்ட்டில் ஆஜராகினார். சுர்ஜித் சிங் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஜாமீனை ரத்து செய்து சவுதாலாவை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து உடனடியாக சவுதாலா கைது செய்யப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications