எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்- அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

தகுதிநீக்க வழக்கில் 17 எம்எல்ஏக்கள் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் அதுகுறித்து வரும் 27-இல் விசாரணை நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    17 எம்எல்ஏக்கள் மனுவை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்- வீடியோ

    டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து 17 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் நம்பிக்கை இல்லை என்று அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இது கொறடா உத்தரவை மீறிய செயல் என்று கூறப்பட்டது.

    இதையடுத்து அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 16-ஆம் தேதி அளிக்கப்பட்டது. இதை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வும் அளித்தனர். அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றார். இதையடுத்து நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

    3ஆவது நீதிபதியிடம் செல்லும் வழக்கு

    3ஆவது நீதிபதியிடம் செல்லும் வழக்கு

    அப்போது சுந்தர் கூறுகையில் சபாநாயகர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகளும் மாறுப்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு 3-ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.

    தகுதிநீக்க வழக்கு

    தகுதிநீக்க வழக்கு

    தகுதிநீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விமலாவிடம் சென்றுள்ளது. இந்நிலையில் மாறுபட்ட தீர்ப்பாலும் 18 தொகுதிகள் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த கோரியும் தங்கதமிழ் செல்வன் மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்றார்.

    அப்பீல்

    அப்பீல்

    தகுதிநீக்க வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறி தங்கதமிழ் செல்வனை தவிர மீதமுள்ள 17 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல், அருண் மிஸ்ரா ஆகியோர் முன்பு வரும் 27-ஆம் தேதி விசாரணை நடத்த ஒப்புக் கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+