கழிப்பறை இல்லாத வீட்டில் வாழ மாட்டேன்: விவாகரத்து கோரும் பீகார் பெண்
பாட்னா: வீட்டில் கழிப்பறை இல்லாததால் பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனிதா தேவி(25). அவருக்கும் அதே மாவட்டத்தில் உள்ள பஹர்பூர்-பிஷென்பூர் பஞ்சாயத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தீரஜ் சவுதரிக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சுனிதா, நீரஜ் தம்பதிக்கு குழந்தை இல்லை. சுனிதா தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோருடன் இரண்டு அறைகள் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

திருமணம் முடிந்த நாளில் இருந்து வீட்டில் ஒரு கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு சுனிதா தனது கணவரை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் ஏதாவது காரணம் கூறி கழிப்பறையை கட்டாமல் இருந்துள்ளார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சுனிதா கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர் தீரஜை விவாகரத்து செய்யவும் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து சுனிதாவின் கணவர் கூறுகையில்,
ஆமாம், என் மனைவி கழிப்பறை கட்டிக் கொடுக்குமாறு பல முறை கேட்டார். ஆனால் கழிப்பறை கட்ட என்னிடம் பணம் இல்லை. என் தந்தை வேறு அண்மையில் இறந்துவிட்டார். அதனால் நான் சம்பாதிப்பதை வைத்து தான் குடும்பத்தை நடத்துகிறேன் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications