பிரதமர் மோடி இன்று அயோத்தி பயணம்- 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பங்கேற்பு- பலத்த பாதுகாப்பு!
அயோத்தி: பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி செல்கிறார். இதனையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 18 லட்சம் தீபங்களின் தீப உற்சவத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். இதனையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அங்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கும் சென்று பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கேதார்நாத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் நினைவிடத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணியளவில் பகவான் ஸ்ரீராம்லாலா விராஜ்மானுக்கு பூஜை செய்து பிரதமர் மோடி வழிபடுகிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திரத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்

அயோத்தியில் இன்று மாலை 5.45 மணியளவில் ஸ்ரீராமருக்கு ராஜ்யாபிஷேகத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார். இதன் பின் மாலை 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் நடைபெறும் பிரம்மாண்டமான ஆரத்தியை அவர் பார்வையிடுகிறார். அத்துடன் சரயு நதி படித்துறையில் பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் தீப உற்சவத்தில் முதல் முதலாக பிரதமர் மோடி நேரடியாக கலந்து கொள்கிறார். 18 லட்சம் தீபங்கள் இந்த நிகழ்ச்சியில் ஏற்றப்பட உள்ளன.

இன்றைய தீப உற்சவத்தின் போது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு நடன வடிவிலான 11 ராம்லீலா மற்றும் 5 அனிமேஷன் வடிவிலான அலங்கார வாகனங்கள் இடம்பெறும். சரயு நதியில் கரைகளில் பிரம்மாண்டமான இசை லேசர் காட்சிகளுடன் முப்பரிமாண ஹோலோ கிராபிக்ஸ் காட்சிகளையும் பிரதமர் பார்வையிடுகிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தி நகரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications