"கேட்ட பாட்டு போட மாட்டியா?” - பார்ட்டியில் டிஜேவை சுட்டுக் கொன்ற வாலிபர்
பரேலி: உத்திர பிரதேசத்தில் பிறந்த நாள் பார்ட்டியில் தனக்கு பிடித்த பாட்டு போடாத டிஜேயை வாலிபர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் சிந்தவ்லி கிராமத்தில் பிரபல நகை வியாபாரி ஒருவரது பேத்தியின் பிறந்த நாள் பார்ட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதுபோன்ற பார்ட்டிகளில் "டிஜே" என்று அழைக்கப்படும் டிஸ்க் ஜாக்கி ஒருவர் இன்னிசை பாட்டுகளை ஒலிபரப்புவார். அவ்வேலையில் ஈடுபட்டுள்ள அருண் வால்மீகி இந்த பார்ட்டியில் டிஜேவாக பணிபுரிந்தார்.
அப்போது பார்ட்டியில் கலந்து கொண்ட அஷூ என்ற வாலிபர் தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை போடும்படி அருணை வற்புறுத்தினார். அந்தப் பாடல் தனது இசைத்தொகுப்பில் இல்லாததால் அந்தப் பாடலை போட முடியாது என்று அருண் பொறுமையாகக் கூறினார். ஆனால் பாடலை போட்டே ஆக வேண்டும் என்று ரகளையில் ஈடுபட்ட அஷூ திடீரென தன் பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அருணை சரமாரியாக சுட்டார்.
இந்தக் கொடூர தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அருண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த காவல் துறையினர் அஷூன் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் அஷூ தலைமறைவாகி விட்டதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications