ஜல்லிக்கட்டு.. சுப்ரீம்கோர்ட்டில் புது வழக்குப் போட்டது தேமுதிக
டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்து.
இதுதொடர்பாக தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜல்லிக்கட்டு, பல நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய விளையாட்டு. அறுவடைக் காலங்களில் ஒரு திருவிழாவாக நடத்தப்படும் இந்த வீர விளையாட்டுக்காக காளைகளுக்கு விசேஷ பயிற்சி அளிக்கப்படுகிறது. அவை ஒருபோதும் துன்புறுத்தப்படுவது இல்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2011ம் ஆண்டில் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்தது. அந்த அறிவிக்கை மீதான வழக்கில் கடந்த 2014ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தற்போதைய மத்திய அரசு ஜனவரி 7ம் தேதியன்று வெளியிட்ட அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகளை அந்த பட்டியலில் இருந்து நீக்கி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது. அந்த அறிவிக்கை மீது சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, எந்த வகையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மீறுவதாக இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட் தற்போது மத்திய அரசின் அறிவிக்கைக்கு விதித்துள்ள இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும். எங்களையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு எங்கள் தரப்பு வாதங்களையும் முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications