திமுகவை அவமானப்படுத்திய டெல்லி வாலாக்களுக்கு மூக்கறுப்பு... கழக சேலையில் கெத்து காட்டிய கனிமொழி!
2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படி வருமோ என்று திமுகவினர் பதைபதைப்பில் இருந்த நேரத்தில் டெல்லி நீதிமன்றத்தில் காலையில் தீர்ப்பை கேட்பதற்காக வந்திருந்த கனிமொழி கருப்பு சிவப்பு சேலையில் வந்திருந்தார்.
Recommended Video

டெல்லி : ஒரு புறம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றொரு புறம் 2ஜி வழக்கின் தீர்ப்பு என்று திமுகவிற்கு இன்று நெருக்கடியான நாளாக இருந்தது. தீர்ப்பு எப்படி வருமோ என்று கட்சியினர் பதைபதைப்பில் இருக்க நம்பிக்கையோடு காலையில் நீதிமன்றம் வரும் போதே கருப்பு, சிவப்பு சேலையில் கலக்கலாக வந்தார் கழகக் கண்மணி கனிமொழி.
2ஜி வழக்கின் தீர்ப்பு டிசம்பர் மாதத்தில் வருவது திமுகவை அழிக்க வரும் சுனாமி பேரழிவு என்று கலக்கத்தில் இருந்தனர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும். பழமை வாய்ந்த கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த அ.ராசா மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது இமாலய ஊழல் நடந்ததாக தேசிய ஊடகங்கள் அங்கலாய்த்தன.
திமுகவினரின் மிகப்பெரிய ஊழல் என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டன. அதோடு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி நீரா ராடியாவுடன் தொலைபேசியில் உரையாடியது என்று ஒரு ஆடியோவை வெளியிட்டு, இந்த ஊழல் சதிக்கு காரணமாக இருந்தார் என்று கனிமொழியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டது.

கலக்கலாக வந்த கனிமொழி
2ஜி வழக்கிற்காக டெல்லி திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டார் கனிமொழி. வலிகள் வேதனைகள் என்று கடந்த 6 ஆண்டுகள் கடினமானதாகவே சென்று கொண்டிருந்த கனிமொழிக்கு இன்றைய தீர்ப்பு நிம்மதியளித்துள்ளது. இன்று காலையில் வழக்கின் தீர்ப்புக்காக டெல்லி சிபிஐ நீதிமன்றம் வந்தவர் சிவப்பு நிறத்தில் கருப்பு பார்டர் வைத்த சேலையை அணிந்திருந்தார்.

திமுகவை நிமிரச் செய்த தீர்ப்பு
திமுகவின் கருப்பு, சிவப்பு நிறத்திலேயே உடையணிந்து வந்திருந்த கனிமொழி வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வந்து தொண்டர்களைப் பார்த்து வெற்றிக் குறி காட்டி விட்டு புறப்பட்டார். நீதி நிலைநாட்டப்பட்டது, நியாயம் வென்று விட்டது என்பதை சொல்லி மகிழ்ந்து வரும் கனிமொழி தான் திமுகவின் அடையாளம் என்பதை உணர்த்துவதாகவே இன்று அவர் அணிந்திருந்த உடை இருந்தது.

அரவிந்தனின் காஸ்ட்யூம் சேஞ்ச்
கனிமொழியுடன் அவருடைய கணவர் அரவிந்தனும் உடன் வந்திருந்தார். கனிமொழி நீதிமன்றத்திற்குள்ளே செல்லும் போதும் சரி வெளியே வந்த பின்னரும் சரி கனிமொழிக்கு பக்கத்திலேயே இருந்தார் அரவிந்தன். காலையில் காவி நிற பைஜாமா அணிந்திருந்தவர், வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு அவரும் கருப்பு பைஜாமாவிற்கு மாறினார்.

கருணாநிதியின் மஞ்சள் துண்டு
மகள் கனிமொழிக்கு நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பதற்றத்துடன் டெல்லி நீதிமன்றம் வந்திருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள் மஞ்சள் நிற சேலை அணிந்து வந்திருந்தார். கருணாநிதியின் மஞ்சள் துண்டு இல்லாத குறையை ராஜாத்தி அம்மாள் போக்கினார். ஒருவேளை சனிப்பெயர்ச்சி கனிமொழிக்கு ஒர்க் அவுட் ஆகுதோ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications