இந்திராணி தான் ஷீனாவை பெற்ற தாய்: மரபணு சோதனையில் உறுதி
மும்பை: மரபணு சோதனையில் இந்திராணி முகர்ஜி தான் ஷீனா போராவை பெற்றெடுத்த தாய் என்பது உறுதியாகியுள்ளது என மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைதான அவரது தாய் இந்திராணி முகர்ஜி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். போலீசார் என்ன கேட்டாலும் பதில் அளிக்காமல் அடம் பிடித்து வருகிறார் இந்திராணி. இந்நிலையில் ஷீனாவின் உடலை எரித்த ரைகாட் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கிடைத்த மண்டை ஓடு ஷீனாவுடையது தானா என்று ஆய்வு நடந்து வந்தது.

இந்திராணி
மரபணு சோதனையில் ரைகாட் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடு ஷீனாவுடையது தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த மரபணுவும் இந்திராணி, மிகைல் போராவின் மரபணுக்களும் ஒத்துப் போகிறது.

தாய்
மரபணு சோதனையில் இந்திராணி முகர்ஜி ஷீனா போராவை பெற்றெடுத்த தாய் என்பது உறுதியாகியுள்ளது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கன்னா
இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவை போலீசார் கொல்கத்தா அழைத்துச் சென்றனர். அவர் காண்பித்த இடத்தில் கொலையாளி அணிந்திருந்த ஷூ கிடைத்தது என்று மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

பணம்
இந்திராணியின் பண பரிவர்த்தனைகள் பற்றி சிறப்பு குழு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே ஷீனாவின் நகைகள் சிலவும் கிடைத்துள்ளன என மரியா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications