வாயைப் பிளக்க வைத்த பவன் கல்யாண் மனைவி? அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஆந்திரா: பவன் கல்யாணின் மனைவியும் முன்னாள் ரஷ்ய மாடல் அழகியுமான அன்னா லெஷ்னேவாவின் சொத்து மதிப்பு பற்றிய சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல் பலரை வாய் பிளக்க வைத்துள்ளது. இந்தளவுக்கு வசதியானவரா பவன் கல்யாணின் மனைவி என்று அவரது ரசிகர்களே வியந்து போய் உள்ளனர்.
1996 ஆம் ஆண்டு வெளியான 'அக்கடா அம்மாயி இக்கட அப்பா' படத்தின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகில் நடிகராக அடி எடுத்துவைத்தவர் பவன் கல்யாண். அவரை இந்தப் படம்தான் டோலிவுட் சினிமாவுக்கு அறிமுகம் செய்தது. அதற்கு முன்பாகவே அவரது அண்ணன் சிரஞ்சீவி, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் பெரிய நட்சத்திரமாக வலம் வந்தார்.

பவண் கல்யாண் அறிமுகம் என்னவோ 1996இல் நடந்திருக்கலாம். ஆனால், 1998 ஆம் ஆண்டு வெளியான 'தோலி பிரேமா' அவரது சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அவரது முதல் வெற்றிப் படம் இதுதான்.
எனவேதான், இந்த வெற்றியை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் தனது ஜனசேனா கட்சியை 21 இடங்களில் வெற்றி பெறவைத்தவுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார் பவன்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் எதிர்க்கட்சியாக அவர் பதவியில் அமருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார் பவன். இந்த அதிரடியான அரசியல் மாற்றத்தை ஆந்திர அரசியல் களமே எதிர்ப்பாக்கவில்லை. ஆனால், அதுதான் நடந்தது.
நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பவன் கட்சி வெற்றி பெற்றவுடன் அந்தச் செய்தி எந்தளவுக்குத் தலைப்புச் செய்தியானதோ அதே அளவுக்கு அவரது மனைவி அன்னா லெஷ்னேவா வீடியோ ஒன்று வைரலானது.
இந்திய முறைப்படி தனது கணவரை ஆரத்தி எடுத்து வரவேற்ற அவரது முகத்தில் துளி கூட இந்தியப் பெண்ணிற்கான சாயல் இல்லை. ஆகவே, அவர் யார்? பார்க்க வெளிநாட்டுப் பிரஜை போல் இருக்கிறாரே என்று 2கே கிட்ஸ் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
அதன்பின்னர் தான் பலரும் கூகுள் உதவியுடன் அவரைப் பற்றித் தேடத் தொடங்கினர். பவன் கல்யாண் யார்? பவன் கல்யாண் மனைவி பெயர் என்ன? அவரது முதல் மனைவி யார்? அவரது கட்சியின் பெயர் என்ன? அவருக்கு வயது என்ன? என்பது கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா ஒரு ரஷ்யப் பெண். இவர் ஒரு மாடல் மற்றும் நடிகை. 1980களில் பிறந்த இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா உலகிற்குள் அடி எடுத்து வைத்தார்.
அதாவது 'தீன் மார்' படப்பிடிப்பில் அவர் முதன்முதலாக பவன் கல்யாணைச் சந்தித்தார். அதன் மூலம் ஒரு நட்பு மலர்ந்தது. அது பிறகு உறவாக மாறியது. இவர்களின் திருமணம் செப்டம்பர் 30, 2013 இல் தடபுடலாக நடந்தது. சொல்லப் போனால், இந்த ரஷ்ய மாடல் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவி.
அன்னா லெஷ்னேவா குடும்பம்: இந்தத் தம்பதிக்கு ஒரு மகன். அவரின் பெயர் மார்க் ஷங்கர் பவனோவிச். அன்னா முன்னே கல்யாணமானவர். ஆகவே அவருக்கு திருமணத்திற்கு முன்பே, பொலேனா அஞ்சனா பவனோவா என்ற ஒரு மகள் இருக்கிறார். .
அன்னாவின் முதலீடுகள்: மாடலிங் தொழிலைத் தவிர, அன்னா சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் முதலீடு செய்துள்ளதாக வதந்தி பரவியது.அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், இவருக்கு ரஷ்யா, சிங்கப்பூரில் சொத்துக்கள் உள்ளன. அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1800 கோடி எனத் தெரிகிறது.

பவன் கல்யாண் இவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு 1997 முதல் 2008 வரை அவர் முதல் மனைவி நந்தினியுடன் வாழ்ந்தார். பின்னர் நடிகை ரேணு தேசாய் திருமணம் செய்து கொண்டார். அந்த உறவு 2009 முதல் 2012 வரை நீண்டது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அன்னா லெஷ்னேவாவுக்கு பவன் கல்யாணுக்கும் குடும்ப உறவு சுமுகமாக இல்லை எனக் கடந்த சில ஆண்டுகளாக வதந்தி பரவியது. ஆனாலும் அவர் பவனின் அரசியல் வாழ்க்கையைத் தீவிரமாக ஆதரித்தார். அவர் தனது கணவரின் வெற்றிக்குப் பிறகு ஆரத்தி எடுத்து வரவேற்றதன் மூலம் பலரது வாயை முடியுள்ளார்.
நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 21 தொகுதியில் வெற்றி பெற்றது ஒரு சாதனையே அல்ல. ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி இருப்பதுதான் மாபெரும் மாற்றம்.
அந்த மாற்றம் குடும்பத்தில் நேர்மறையான சில மாற்றங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications