அண்ணி அக்கப்போரு.. அதென்ன "கர்வா சௌத்".. கொழுந்தன்னு கூட பார்க்கலியே.. போலீசுக்கு ஓடிய கணவன்.. கடவுளே
கான்பூர்: கர்வா சௌத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில், உத்தரபிரதேசத்தில் இந்த கொடுமை நடந்துள்ளது.

கர்வா சௌத் என்றால் என்ன தெரியுமா? வடமாநிலங்களில் மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்றாகும்.. நவம்பர் மாதம் முதல் தேதியான, இன்றுதான் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நம்ம ஊரில் வரலட்சுமி நோன்பு உள்ளதைபோல, வடஇந்தியாவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.. இந்த நாளில், திருமணமான பெண்கள், தங்களுடைய கணவருக்காக, நாளெல்லாம் விரதம் இருப்பார்கள்.. அதாவது, காலையில் சூரிய உதயம் தொடங்கி இரவு நிலவு உதிக்கும் வரை, நாள் முழுவதும் சாப்பிடாமலேயே இருப்பார்களாம்..
விரதம்: பிறகு இரவு நேரம், நிலாவை பார்த்துவிட்டு, அதற்கு பிறகு கணவரின் கையால் தண்ணீர் வாங்கி குடித்து, இந்த விரதத்தை முடிப்பார்களாம். நிலவை பார்த்த பிறகு, ஒரு சல்லடையால் தன்னுடைய கணவரை பார்ப்பார்கள்.. இதெல்லாம் இந்த பண்டிகையின் முக்கியமான சடங்காக உள்ளது.
இந்த சல்லடையில் நூற்றுக்கணக்கான துளைகள் இருக்குமாம்.. நிலவை பார்த்துவிட்டு உடனடியாக கணவரின் முகத்தை பார்க்கும்போது, அந்த சல்லடையில் இருக்கும் நூற்றுக்கணக்கான துளைகள் போல, தங்களுடைய கணவரும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக நூறாண்டு வாழுவார் என்பது ஐதீகமாம்.
பிரியா எங்கே: இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை, மேற்கொண்டுள்ளார் பிரியா என்ற பெண்.. இவர் உத்தரப்பிரதேச மாநிலம், அமஹேதா அதிபூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. இவரது கணவர் பெயர் அசோக்குமார்.. இவர் சிசோலா கிராமத்தை சேர்ந்தவர்.. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 2019-ல் கல்யாணம் நடந்தது.. விசு என்ற மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், அசோக்குமாரின் தம்பி ராகுல், அடிக்கடி வீட்டிற்கு வந்துபோனார்.. அண்ணன் இல்லாத நேரத்திலும், வீட்டுக்கு போனதையடுத்து, அண்ணியுடன் நெருக்கம் ஏற்பட்டது.. இந்த விஷயம், அசோக்குமாருக்கு தெரிந்துவிட்டது. அதனால், பிரியாவை கண்டித்திருக்கிறார் அசோக்குமார்.. அதுமட்டுமல்லாமல், தம்பியையும் இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். இதனால் தம்பதியிடையே நிறைய மனக்கசப்பு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
பண்டிகை: இப்படிப்பட்ட சூழலில்தான், கர்வா சௌத் பண்டிகை வந்தது.. இதற்காக விரதமிருக்க போவதாக பிரியா சொன்னார்.. ஆனால், இந்த நோம்பிற்காக சில பொருட்கள் தேவை என்று அசோக்குமாரிடம் பிரியா கேட்டிருக்கிறார்.. உடனே அசோக்குமாரும், பிரியாவை கடைக்கு அழைத்து சென்று, பொருட்களை வாங்கி, மறுபடியும் பிரியாவை வீட்டில் கொண்டுவந்துவிட்டுவிட்டு வேலைக்கு போய்விட்டார்.
வழக்கம்போல் டியூட்டி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தால், பிரியாவை காணோம்.. மகன் விசுவையும் காணோம்.. எங்காவது வெளியில் சென்றிருப்பார்கள் என்று நினைத்தார்.. ஆனால், நீண்டநேரமாகியும் காணவில்லை என்பதால், பீரோவை திறந்து பார்த்துள்ளார்.
அப்போது, பீரோவிலிருந்த தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப்பணம் எல்லாமே மாயமாகியிருந்தது. பணம் நகைகளுடன் பிரியா தலைமறைவானதும் தெரிய வந்தது. பிறகு உடனே தம்பி ராகுலை தேடிப்போனார். ஆனால் ராகுலும் மிஸ்ஸிங்.
தம்பி ராகுல்: உடனே இதுகுறித்து போலீஸில் அசோக்குமார் புகார் செய்துள்ளார்.. என்ன நடந்தது என்று போலீசார் விசாரித்தபோதுதான், தன்னுடைய தம்பி ராகுல் அடிக்கடி வீட்டிற்கு வந்து போவதையும், பிரியாவுடன் நெருக்கம் பழக்கம் ஏற்பட்டதால், மனைவியை கண்டித்ததாகவும், இப்போது 2 பேருமே ஓடிப்போய்விட்டார்கள் என்றும் கண்ணீர் வடித்தார்.
மனைவி, மகனை எப்படியாவது கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகாரிலும் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆனாலும், கணவன் நீண்டகாலம் வாழ வேண்டும் என்ற, "கர்வா சௌத்" விரத நாளிலேயே, மச்சினனுடன் பிரியா ஓடிப்போனதுதான் ஹைலைட்.












Click it and Unblock the Notifications