டுவிஸ்ட்.. விடிஞ்சா கல்யாணம்.. முந்தைய நாளே கல்யாண பெண் "நாசம்".. என்னாச்சு தெரியுமா? சபாஷ் கோர்ட்
போபால்: நீதிமன்றம் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்புகளும், பொதுமக்களிடம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியே செல்கிறது. அப்படித்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ளது ரேவா என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் 23 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. 2 வீட்டு தரப்பிலுமே பெரியவர்கள் பார்த்து இந்த திருமணத்தை நிச்சயித்திருந்தார்கள்.

பத்திரிகைகள் : கடந்த டிசம்பர் 3ம்தேதிதான் திருமணத்துக்கான நாளையும் குறித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய துவங்கினர்.. திருமணம் நடத்த இதற்காக மண்டபம் பார்த்து, பத்திரிகைகளும் அச்சடித்து, சொந்தக்காரர்களுக்கும் வழங்கி வந்தனர்.. இதனால் இரு வீட்டார்களுமே படுபிஸியாக கல்யாண வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
டிசம்பர் 2ம் தேதி, அதாவது திருமணத்துக்கு முந்தைய நாள் சாயங்காலம், மணப்பெண் வெளியில் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.. அப்போது, மணப்பெண்ணுக்கு நன்கு பழக்கமான இளைஞர் ஒருவர் அங்கே வந்துள்ளார்.. மணப்பெண்ணை வழிமறித்து பேசிக் கொண்டிருந்தவர், திடீரென பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.. அத்துடன், நடந்த சம்பவம் குறித்து வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு போயிருக்கிறார்.
கல்யாண பெண்: இதனால் பயந்துபோன கல்யாணப்பெண், பேயறைந்த மாதிரி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.. மகளின் முகத்தில் கலவரம் சூழ்ந்துள்ளதை கவனித்துவிட்டு அவரது அம்மா பதறிப்போனார். என்ன நடந்தது? என்று மகளிடம் கேட்டுள்ளார்.. பலமுறை வற்புறுத்தி கேட்டபிறகுதான், நடந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே அம்மாவிடம் சொல்லி உள்ளார் கல்யாணப்பெண்..
ஆனால், அதற்குள் இந்த விஷயம் வெளியே கசிந்துவிட்டது.. மாப்பிள்ளை வீட்டாரின் காதுக்கும் சென்றுவிட்டது.. கல்யாண மண்டபமே ரணகளமாகிவிட்டது.. இறுதியில், திருமணத்தை நிறுத்தியே தீருவது என ஒற்றைக்காலில் நின்றனர்.. விடிந்தால் திருமணம் நடக்கும்போது, நள்ளிரவில் மாப்பிள்ளை வீட்டார் இந்த தீர்க்கமான முடிவை அறிவித்தார்கள். திருமணமும் நின்றுவிட்டது.
அதிரடி கைது: இந்த சம்பவம் நடந்து ஒன்றரை மாதமாகிவிட்டது.. ஆனால் கடந்த 23ம் தேதி, திடீரென அந்த பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் மறுநாளே, அதாவது ஜனவரி 24 ம் தேதி, பலாத்காரம் செய்த நபரை அதிரடியாக கைது செய்து, ஜெயிலிலும் அடைத்தனர்.
அந்த இளைஞனுக்கு 24 வயதாகிறதாம். ஆனால், இதைத்தவிர வேறு தகவலையும் போலீசார் அவரை பற்றி தரவில்லை.. காரணம், பெண்ணின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக, பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆணின் அடையாளங்களை போலீஸார் தற்சமயம் வெளிப்படுத்தவில்லை. பலாத்காரம் சம்பவம் நடந்து ஒன்றரை மாதம் கழித்து, ஏன் போலீசுக்கு வந்து புகார் செய்தார் தெரியுமா அந்த பெண்?
நீதிமன்ற தீர்ப்பு: பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதுடன், திருமணம் நின்று போனதால், பெண் வீட்டினர் நிறையவே அதிர்ந்து போயிருந்தார்கள்.. இந்த ஒன்றரை மாதமாக வெளியிலும் அவர்களால் தலைகாட்ட முடியவில்லை.. குடும்பமே முடங்கிப்போய் சுருண்டுவிட்டது.
அப்போதுதான், முசாபர்நகர் போக்சோ வழக்கல், பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஆயுள் தண்டனை உள்ளிட்ட அதிரடி தீர்ப்புகள் வெளியாகின.. பீகாரில் 15 வயது தலித் சிறுமியை, 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், சம்பந்தப்பட்ட 3 பேருக்குமே ஆயுள் தண்டனை தந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சட்டம்: சட்டத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு, பாதிக்கப்பட்ட பெண், தன்னுடைய பெற்றோரையும் அழைத்து கொண்டு, பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக போலீஸில் இந்த புகாரை தந்திருக்கிறார்... பாதிக்கப்பட்டவர்களின் பக்கம், எப்போதுமே நீதிமன்றங்கள் என்றுமே துணைநிற்பது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பலத்தையும், ஆறுதலை தந்துகொண்டிருப்பது போற்றத்தக்கது..!!!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications