ஹீரோ சிக்கிட்டாரு.. காதலியை கட்டிப்பிடித்து, முத்தம் தந்துக்கொண்டே பைக் ஓட்டி.. கடைசியில் செம ஹைலைட்
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. யார் இந்த காதல் ஜோடி?
நாளுக்கு நாள் சில காதல் ஜோடிகளின் அட்டகாசங்களும், சேட்டைகளும், அத்துமீறல்களும், பொதுவெளியிலேயே பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றன.. சிலசமயம் இந்த அக்கிரமம் எல்லைமீறி செல்வதுடன், அவை வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி விடுகிறது.

எல்லைமீறல்கள்: இத்தனை காலமும், ஒதுக்குப்புறத்தில், மறைவிடத்திலும் மட்டுமே தென்பட்டு கொண்டிருந்த இப்படியான அசிங்கங்கள், வெளிப்படையாகவே தற்போது அதிகரித்துவிட்டது.. அதிலும் பைக்குகளில் செல்லும் காதல் ஜோடிகளின் அந்நியோன்யம், ஒரு அளவேயில்லாமல் போய் கொண்டிருக்கிறது.
4 நாட்களுக்கு முன்புகூட பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்தது.. ஏர்போர்ட் ரோட்டில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, வேகக்கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் மூலமாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்க்ள.
மேம்பாலம்: அந்தவகையில், எலகங்கா மேம்பாலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு இளம் காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. அப்போது அந்த இளைஞர், காதலியை மடியில் உட்கார வைத்துக் கொண்டே, பைக்கை ஓட்டி சென்றுள்ளார்..

பெட்ரோல் டேங்க் மீது உட்கார்ந்திருந்த அந்த பெண்ணை, தன்னுடைய தொடை மீது ஏறி உட்கார வைத்துக்கொண்டு, அந்த பெண்ணை கட்டியணைத்தப்படியே பைக்கை ஓட்டியிருக்கிறார் இளைஞர். அதுவும் 2 பேருமே ஹெல்மெட் போடாமல் இருந்திருக்கிறார்கள்..
வீடியோ: இந்த பைக்குக்கு பின்னாடியே வாகன ஓட்டிகள் இதை வீடியோ சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டதும், எலகங்கா போலீசாரின் கவனத்திற்கு வீடியோ சென்றது. கடைசியில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன், அந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள்.
இதைவிட மோசமான சம்பவம் ஒன்று ராஜஸ்தானில் நடந்துள்ளது.. அம்மாநிலத்தில் உள்ள கோட்டாவில், ஒரு ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. அப்போது, காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார வைத்துக் கொண்டார் இளைஞர்.. அதுமட்டுமல்லாமல், காதலிக்கு முத்தம் தந்து கொண்டே பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.. ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
போலீஸ்: பிறகு, வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், இதனை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார். இந்த வீடியோவானது, ராஜஸ்தான் போலீசாரின் பார்வைக்கும் வந்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டி பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக இவர்கள் 2 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர்... அந்த இளைஞர் பெயர் முகமது வாசிம்.. 25 வயதாகிறது.. கோட்டா மாவட்டத்தில் உள்ள கைதுன் நகரைச் சேர்ந்தவராம்.

மன்னிப்பு: இந்த காதல் ஜோடியை இன்று போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால், அதற்கு முன்னதாக, காதலர்கள் 2 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்திருக்கிறார்கள்.. பொதுவெளியில், இப்படி பைக்கில் செல்வது தவறு என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவே, வீடியோ எடுத்து மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர்.
அந்த வீடியோவில், "எங்களை போல யாருமே இப்படி தவறு செய்ய வேண்டாம்.. சாலையில் வாகனங்களில் செல்லும்போது விபரீதத்தில் ஈடுபட வேண்டாம்" என்று முகமது அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த பெண்ணும், இதுபோலவே வீடியோவில் பேசுகிறார்.. இரண்டு பேருமே காதை திருகி, தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பும் கேட்கிறார்கள்.
2 வீடியோக்கள்: பைக் ஓட்டிக்கொண்டே காதலிக்கு முத்தம் தந்த வீடியோவும், காதலர்கள் 2 பேரும் மன்னிப்பு கேட்கும் வீடியோவும் இரண்டுமே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications