ஏய் ஏய் ஏய்.. 80 வயது தாத்தாவுக்கு வந்த வாழ்வை பாத்தீங்களா? 25 வயது பெண்ணோட கல்யாணம்.. நம்ம ஊர்லதான்
பாட்னா: 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதேயான பெண்ணை நேற்று திருமணம் செய்துள்ளார்.. இந்த தம்பதிகளின் கல்யாண வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
காதல் எல்லா காலகட்டங்களிலும் புதிதாகவே பிறந்து கொண்டிருக்கிறது.. காதலுக்கு கண்ணில்லை.. வயதுமில்லை.. அழகுமில்லை.. என்றெல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்டு வருபவைதான்...

அபூர்வ காதல்: ஆனாலும், 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம் இருப்பவரை திருமணம் செய்து கொண்டு மிச்சமிருக்கும் வாழ்நாளை அவருடன் வாழ விரும்புவது அபூர்வமான விஷயம்.
இப்படியான அபூர்வ திருமணங்கள் தற்போதெல்லாம் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.. 2 வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் என்பவர் மிராக்கிள் என்ற பெண்ணை சந்தித்தார்.. சார்லஸுக்கு 85 வயதாகிறது.. மிராக்கிளுக்கு 24 வயதாகிறது.. இருவருக்கும் 61 வயது வித்தியாசம்.. அதாவது மிராக்கிளின் தாத்தாவைவிட, சார்லஸ் 10 வயது மூத்தவராம்..
பூரிப்பு: தன்னுடைய காதலை சார்லஸ், மிராக்கிளிடம் சொல்லவும், மிராக்கிளும் அதற்கு டனே ஓகே சொல்லிவிட்டார்.. 2 பேருமே திருமணம் செய்துகொண்டனர்... தன்னுடைய 85 வயது கணவன் குறித்து மிராக்கிள் சொல்லும்போது, "அவர் 100 அல்லது 55 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.. நான் அவரை விரும்புகிறேன்... அவர் அழகாக இருக்காரு. எப்பவுமே காலையில் சீக்கிரமாக எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்.. இதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது" என்று பூரித்து சொன்னார் மிராக்கிள்..
நம்முடைய பெங்களூருவிலும்,. 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்திருக்கிறர்.. அதுவும் காதலித்து கல்யாணம் செய்துள்ளார்.. இந்த கல்யாணம் தாத்தாவின் 9 பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் முன்னிலையிலேயே நடந்திருந்தது சில மாதங்களுக்கு முன்பு ஆச்சரியமாக பேசப்பட்டது.
திருமணம்: இதோ, வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று 80 வயது தாத்தா ஒருவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்துள்ளார்.. ஹம்ஜாபூர் பீகார் மாநிலம், கயா மாவட்டத்தில் வசித்து வருகிறார் முஹம்மது கலிமுல்லா நூரானி..
இவர் ஒரு விவசாயி.. 80 வயதாகிறது.. திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கம் திருமணமாகிவிட்டது. முஹம்மதுவின் மனைவி இறந்ததிலிருந்தே தனியாக வசித்து வந்தார்... இப்படியொரு முதுமைக் காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று முஹம்மது ஆசைப்பட்டார்.. அதனால், 2வது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.
வெட்கம்: அதன்படி 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்... இந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா பர்வீன்... இவர்களது திருமண வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், மணமகள் - மணமகனின் முழு சம்மதத்தை பெற்றே இந்த திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.. இந்த ஜோடியை பார்க்க ஏராளமானோர் மண்டபத்தில் திரண்டுவிட்டார்கள்.
மாப்பிள்ளை தாத்தா படு உற்சாகத்துடன் மாலையும் கழுத்துமாக காணப்பட, ரேஷ்மாவோ வெட்கம் பிடுங்கி எடுக்கிறது.. இந்த வீடியோதான் இப்போது டிரெண்டாகி கொண்டிருக்கிறது. இதைப்பார்த்து கல்யாணமாகாத 90's கிட்ஸ்களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது..!!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications