ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. “வயிற்று வலி” என வந்த நபர்! “தலைவலி” தரும் டாக்டரின் இந்தி மருந்துச்சீட்டு

Subscribe to Oneindia Tamil

போபால்: இந்தி மொழியில் மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் இந்தி மொழியில் மருந்து சீட்டை எழுதிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தி மொழியில் மருத்துவ பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். அரசு மருத்துவமனைகளில் மருந்துச் சீட்டிகளில் இந்தியில் எழுதவும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் மருந்து கவர்களில் இந்தி மொழியில் எழுதலாம் என்றும் அதன் மேலே கடவுள் நாமத்தை குறிப்பிடலாம் எனவும் தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்திமயம்

இந்திமயம்

நாட்டில் பெரும்பான்மையான மக்கள் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தி வரும் நிலையில், மருந்தக ஊழியர்கள், இந்தி தெரியாத மருத்துவர்கள், இந்தி பேசாத மாநிலங்களில் வசிக்கும் மக்கள் ஆங்கிலத்திலேயே மருந்துகளை அழைத்தும் படித்தும் பழக்கப்பட்டுவிட்டதால் அதை இந்தி மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

அரசு மருத்துவர்

அரசு மருத்துவர்

இந்தியில் மருந்துகளின் பெயர்களை குறிப்பிடுவது இந்தி திணிப்பு என்றும், மக்களின் உடல்நலம் மற்றும் உயிர் சார்ந்த விசயம் என்றும் எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவர் தன்னுடைய ஆங்கில மருந்துச் சீட்டை முழுக்க முழுக்க இந்தி மொழியில் மாற்றி இருக்கிறார்.

இந்து மருந்துச்சீட்டு

இந்து மருந்துச்சீட்டு

சாட்னா மாவட்டம் கோட்டார் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வரும் மருத்துவர் சர்வேஷ் சிங், நோயாளிகளுக்கு தான் எழுதிக் கொடுக்கும் மருந்துகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அல்லாமல் இந்தி மொழியில் எழுதிக் கொடுத்து உள்ளார்.

ஸ்ரீ ஹரி நாமம்

ஸ்ரீ ஹரி நாமம்

அத்துடன் பொதுவாக மருந்து சீட்டுகளில் குறிப்பிடப்படும் Rx என்பதற்கு மாற்றாக ஸ்ரீ ஹரி என்று அவர் எழுதி இருக்கிறார்.
மருத்துவர் சர்வெஷ் சிங்கின் இந்த மருந்துச் சீட்டு சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், "அமித்ஷாவின் பேச்சை கேட்டு அதை செய்லபத்திதேன்.

வயிற்று வலி நோயாளி

வயிற்று வலி நோயாளி

நான் எழுதிக் கொடுத்த மருந்துச்சீட்டு வயிற்று வலிக்காக வந்தவருக்கு கொடுத்தது. அதில் நோயாளியில் ஒட்டுமொத்த மருத்துவ வரலாற்றையும் குறிப்பிட்டு இருக்கிறது." என்றார். சர்வேஷ் சிங்போல் மற்ற அரசு மருத்துவர்களும் இதை பின்பற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+