புலியுடன் போராடி தன்னுயிரை கொடுத்து எஜமானரின் உயிரை காத்த நாய்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நாய் ஒன்று புலியுடன் போராடி தன்னுயிரை கொடுத்து தன்னை வளர்த்த விவசாயியின் உயிரை காப்பாற்றியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் குதார் நகர் அருகே உள்ள பார்பத்பூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான குருதேவ் சிங். அவர் ஜாக்கி என்ற 4 வயது நாயை வளர்த்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு குருதேவ் தனது வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது தென் கேரி காட்டில் இருந்து புலி ஒன்று அங்கு வந்தது. குருதேவ் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஜாக்கி கண்விழித்து பார்த்தபோது புலி தனது எஜமானை தாக்க வந்தது.

இதையடுத்து ஜாக்கி குருதேவை எழுப்பிவிட்டு புலியுடன் போராடியது. கண்விழித்த குருதேவ் உதவி கேட்டு அலறினார். அதற்குள் புலி ஜாக்கியை படுகாயப்படுத்தி இழுத்துக் கொண்டு ஓடியது.
குருதேவ் ஜாக்கியை பல இடங்களில் தேடிய போது காட்டுப்பகுதியில் அதன் உடல் கிடந்ததை பார்த்து கண்ணீர் சிந்தினார்.
இது குறித்து குருதேவ் கூறுகையில்,
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு என் 2 குழந்தைகள் ஜாக்கியை குட்டியாக தூக்கி வந்தனர். அது தினமும் என் குழந்தைகளுடன் பள்ளிக்கு செல்லும். தன்னுயிரை கொடுத்து தனது நன்றிக் கடனை காட்டிவிட்டது ஜாக்கி என்றார்.
ஜாக்கி இறந்ததை நினைத்து குருதேவ் ஒரு நாள் முழுவதும் சாப்பிடவில்லையாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications