நாயை கண்டா போதும்.... நாகாலாந்துவாசிகளுக்கு அவ்ளோ கொண்டாட்டம்... படிச்சுட்டு டென்ஷனாக கூடாது
கோஹிமா: சென்னையில் நாயை கீழே தூக்கி எறிந்த மருத்துவ மாணவர்களை பெற்றோர்களே போலீசில் சரணடைய வைத்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்... ஆனால் இதே நாய்கள் நாகாலாந்து மாணவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும் தெரியுமா? தொடர்ந்து படியுங்க..
இந்தியாவின் ஆதிகுடிகள் இன்னமும் வேட்டையாடுதலை தங்களது பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகவே வைத்துள்ளனர். ஆனாலும் விலங்குகளுக்கும் ஆதிகுடிகளுக்குமான வாழ்வியல் புரிதல் நீடித்த ஒரு சங்கிலித் தொடராக இருக்கிறது...
இந்தியாவின் பெரும்பாலான ஆதிகுடிகளின் உற்ற தோழனாக உறுதுணையாக இருப்பது நாய்கள்தான்... அதே நேரத்தில் இதே இந்திய தேசத்தின் வடகிழக்கு மாநிலங்களின் நாகா ஆதிகுடி இனமக்களுக்கோ நாய்கள் என்றால் அப்படி ஒரு கொண்டாட்டம்...

பாம்பு, தவளைகள் மார்க்கெட்
ஆம் நாம் பொதுவாக விருந்தினர்களுக்கு ஆடு, கோழி விருந்து வைப்பது போல நாகா இன மக்களுக்கான ஸ்பெஷல் அயிட்டமே 'நாய் கறிதான்'... நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவின் சந்தைகளே விசித்திர உலகத்தில் நுழைந்தது போலதான் இருக்கிறது...ஒருபக்கம் உயிருள்ள தவளைகள், பாம்புகள், நத்தைகள் என அத்தனையும் 'கறி' விற்பனைக்காக காத்திருக்கின்றன... குவியல் குவியலாக பாம்பு கருவாடுகள்... கண்ணில் பார்க்கவே குலைநடுங்க செய்கின்றன...

நாய் கறி சந்தை...
இந்த சந்தைக்கு அப்பால் ஒரு இடம் உண்டு.... கோஹிமா நகரின் ஹைலைட்டே இங்குதான்.... ஆங்காங்கே சாக்குகளில் தலை மட்டுமே தெரியும்படியாக உயிருள்ள நாய்கள் மரணவாசலில் நிறுத்தப்பட்டிருக்கும்...

கர்ண கொடூரமாக கொலை
கொஞ்ச நேரத்தில் ஒரு நாயை எத்தனை கொடூரமாக உயிரிழக்கச் செய்ய முடியுமோ அத்தனை மிருகத்தனமாக அடித்தே கொல்கின்றனர்.... பின்னர் நாய் தலை தனியாக, உடல் தனியாக வெட்டப்பட்டு 'ரகம் வாரியாக' கூறுகள் வைக்கப்படும்..

நாய் லெக்பீஸ்...
அதாவது நாய் லெக்பீஸ், சப்பை பகுதி என கூறு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.. இவை ரொம்பவும் காஸ்ட்லியானவை... இது கோஹிமாவின் சந்தைகளில் மட்டுமே இருக்கும் காட்சிகள் அல்ல..
பொதுவாக நாகா பழங்குடி இன மக்களின் கண்களில் நாய் கண்ணில்பட்டாலே போதும்... கபளீகரம்தான்... கறிவிருந்துதான் என்கின்றனர் ஆய்வாளர்கள்... அப்படி ஒரு பண்பாடு 'நாகா' இனமக்களிடத்தில் இருக்கிறதாம்...
ஜல்லிக்கட்டு மாடுகளை ஜஸ்ட் ஓடவிட்டு மடக்கிப் பிடிப்பதற்கே தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்று ஒப்பாரி வைக்கும் பீட்டா வகையறாக்களுக்கு 'நாய்க்கறி' தேசமான நாகாலாந்தும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பது இன்னமும் தெரியாது போலும்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications