பணிப்பெண்ணால் தாக்கப்பட்ட டெல்லி பாட்டி... தாக்கப்பட்ட கத்தியை வைத்தே தற்காத்துக் கொண்ட தில் சம்பவம்
டெல்லியில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் மூதாட்டியை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு நடகமாடியது அம்பலமாகியுள்ளது.
டெல்லி : தெற்கு டெல்லியில் மூதாட்டி ஒருவரை அவரது வீட்டு பணிப்பெண் கத்தியால் 10 முறை சரமாரியாக குத்திவிட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார் நீர்ஜா குப்தா என்ற மூதாட்டி. இவர் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்துள்ளார் 23 வயது துளசி.

துளசி நீர்ஜாவிடம் தன்னுடைய தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கென ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிகிறது, அவர் தர மறுக்கவே இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் துளசி நீர்ஜாவை கத்தியால் 10 முறை சரமாரியாக தாக்கியுள்ளார். அதையும் மீறி தான் தாக்கப்பட்ட அதே கத்தியை பயன்படுத்தியே துளசியிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டிருக்கிறார் நீர்ஜா.
நீர்ஜாவை தாக்கிவிட்டு கான்பூருக்கு ஒரு ஆட்டோவில் சென்றுள்ளார் துளசி. பின்னர் போலீசாரிடம் தன்னுடைய நகை திருடப்பட்டு விட்டதாகவும், தான் தாக்கப்பட்டதாகவும் நாடகமாடியுள்ளார். ஆபத்தான நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்ஜா அளித்த தகவலின் அடிப்படையில் பின்னர் துளசி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான நகரங்களில் டெல்லி 19வது இடத்தில் இருப்பதாக குற்ற புள்ளி விவரங்கள் வெளியான அடுத்த நாளே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 2016ம் ஆண்டில் அதிக குற்றச் சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
